விசுவாசத்திற்காகத் தைரியமாய்ப் போராடுங்கள் EARNESTLY CONTEND FOR THE FAITH 55-0123E ஞாயிற்றுக்கிழமை மாலை, ஜனவரி 23, 1955 பிலடெல்பியா சபை, சிகாகோ, இல்லினாய்ஸ், அமெரிக்கா சகோ.வில்லியம் பிரன்ஹாம் விசுவாசத்திற்காகத் தைரியமாய்ப் போராடுங்கள் (55-0123E) ...மேலும் நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மரணத்தினாலும், பரிசுத்த ஆவியானவர் மீண்டும் வருவதன் மூலமாகவும் சாத்தியமாக்கப்பட்ட விசுவாசத்தை எங்கள் இருதயங்களில் பதியச் செய்ததற்காக. மேலும், இந்த இரவில் உமது ஆசீர்வாதங்களை எங்களுக்குத் தருவீராக என்று நாங்கள் ஜெபிக்கிறோம். 2 கிறிஸ்துவுக்கு வெளியே இருப்பவர்கள்... இந்த இரவில் உள்ளே வருவார்களாக; மற்றும் வியாதியாயிருப்பவர்கள் குணமடைவார்களாக; தாழ்த்தப்பட்டவர்கள் உயர்த்தப்படுவார்களாக; ஆவியில் சோர்வடைந்தவர்கள் மீண்டும் புதிதாகவும் புத்துணர்ச்சியுடனும் ஆக்கப் படுவார்களாக. பிதாவே, அதனை அருளுவீராக. 3 இப்போது, பரிசுத்த ஆவியானவர் வந்து, தேவனுடைய காரியங்களாகிய, வார்த்தையை எடுத்து, ஒவ்வொருவருடைய தேவைக்கும் ஏற்ப அதை ஒவ்வொரு இருதயத்திலும் வைப்பாராக. இந்த இரவில் தேவை என்னவென்று எங்களுக்குத் தெரியாது, தேவரீர் அறிவீர். உமது குமாரனாகிய கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் அதை உம்மிடம் ஒப்புக் கொடுப்பதால், எங்கள் தேவையனைத்தையும் நீர் சந்திப்பீர் என்று விசுவாசித்து, நம்பிக்கையுடன் உம்மை கேட்கிறோம். ஆமென். அமரலாம். 4 நமது பரலோகப் பிதா ஒவ்வொரு வரையும் நிறைவாக ஆசீர்வதிப்பாராக. (இவை உங்களுடையதா?) [சகோதரர் போஸ் சகோதரர் பிரன்ஹாமிடம் பேசுகிறார்] வருவது... கூட் டத்தின் முடிவு, நமக்கு இன்னும் சில இரவுகளே உள்ளன... அதற்கு முன்னால் அவர்களுக்காக ஜெபிக்க என்னை மறக்க விடாதீர்கள்-அதற்கு முன்னால்... இந்த கைக்குட்டைகள்... இப்போது-இப்போது அல்ல. நான் சொல்ல வந்தது... [சகோதரர் போஸ் சகோதரர் பிரன்ஹாமிடம் பேசுகிறார். ஒலிநாடாவில் காலியிடம்.] 5 இரவுகள் மிகவும் இருட்டாவதில்லை, மழையும் மிகவும் பலமாக பெய்வதில்லை, பாருங்கள். நான் எந்த நேரத்திலும் உங்களுக்காக ஜெபிக்கச் செல்வேன், என்னால் முடிந்ததைச் செய்வேன். 6 இந்தப் பள்ளியின் கலையரங்கத்தை நாம் பயன்படுத்த அனுமதித்த இந்த மனிதர்களை தேவன் ஆசீர்வதிப்பாராக. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்காகத் தங்கள் கதவுகளைத் திறந்த அதன் பெருந்தன்மைக் காகவும், அதன் தயவுக்காகவும், இந்தப் பள்ளி ஒரு நினைவாலயமாக நிற்கட்டும். நான் இங்கே பொறியாளரையும் பல மனிதர்களையும் சந்தித்தேன், அவர்கள் ஒரு சிறந்த மனிதர்கள் குழு, சரிதான். நான் அவர்களைப் பாராட் டுகிறேன். தேவன் அவர்களை ஆசீர்வதிப்பாராக. 7 இப்போது, ஜெபத்தில் இருங்கள். இந்த இரவு ஆராதனையின் இறுதி இரவு; நான் ஊழியக் களத்திற்குச் செல்லும்போது, எனக்காக ஜெபிப்பீர்களா, மாட்டீர்களா? இதுவே கடைசி கூட்டத்தின் நேரமாக இருக்கலாம் என்பதை நாம் உணர்கிறோம், ஏனெனில் நம்மில் அநேகர் இதுபோல மீண்டும் சந்திக்காமல் போகலாம். நாம் அனைவரும், இங்குள்ள இதே கூட்டத்தினர், பரலோகத்தின் இந்தப் பக்கத்தில் மீண்டும் இப்படி சந்திக்காமல் போகலாம். அது உண்மைதான். 8 இங்கே நிறைய முதியவர்கள் இருக்கிறார்கள், நான் எப்போது திரும்பி வருவேன் என்று எனக்குத் தெரியவில்லை. விபத்துக்கள், மற்றும் என்ன நடக்கும் என்பது உங்களுக்குத் தெரியும், என்னால் ஒருபோதும் திரும்பி வர முடியாமல் போகலாம், அல்லது உங்களால் ஒருபோதும் திரும்பி வர முடியாமல் போகலாம். 9 ஆனால் நான்... அப்படி எதுவும் இல்லா விட்டால், ஒருவேளை அப்படி நடந்தால், உங்களுக்கான எனது கடைசி சாட்சியாக இதைச் சொல்கிறேன்: மரித்தோரிலிருந்து எழுந்த இயேசு கிறிஸ்து உண்மையாகவே தேவனுடைய குமாரன். அவரைப் பற்றி நான் பேசுவதை என் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன். அழியாத மற்றும் மிக அன்பான கிறிஸ்தவ அன்போடு நான் உங்களை நேசிக்கிறேன். தேவன் உங்களோடு இருப்பாராக. 10 இப்போது, இங்கே இருக்கும் நமது சிறிய போதகரான, சகோதரர் ஜோசப்பிற்கு, நான் அதை வெளிப்படுத்த வேண்டியதில்லை, அவரைப் பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும். மற்ற அன்பான சகோதரர்களுக்கும், போதகர்களுக்கும், மற்றும்-இந்த இரவில் இங்கே இந்தப் பள்ளத்தில் (pit) அமர்ந்திருக்கும் மற்ற சபைகளின் விசுவாசி களுக்கும்... இது ஒரு இசைக்குழுவினர் அமரும் பள்ளம் (orchestra pit) என்று நினைக்கிறேன்? இது பதிவு செய்யும் கலைஞர்களின் குழி போல் தெரிகிறது. நிச்சயமாக அங்கு அநேகர் இருக்கிறார்கள். 11 எனக்குத் தெரிந்தவர்கள் என்று நான் நம்புகிற சிலரை நான் காண்கிறேன். மூலையில் இருக்கும் இந்தச் சகோதரர்களை எனக்குத் தெரியும், என் நண்பர்களான லியோ மற்றும் ஜீன், மற்றும் சகோதரர் அர்மென்ட், மற்றும் கீழே இருக்கும் சகோதரர் பீலர், மற்றும் பாலஸ்தீனத்தில் இருந்து வந்திருப்பதாக நான் நம்பும் மற்றொறு மிஷனரி சகோதரர். 12 இப்போது, எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை, குணமாக்கப்பட்ட அந்தச் சகோதரியா அது... குடிப்பழக்கத்திற்கு அடிமை யாக இருந்த...? தேவன் உங்களை ஆசீர்வதிப் பாராக, சகோதரி. நான் நிச்சயமாக உங்களை என் முழு இருதயத்தோடு பாராட்டுகிறேன். கர்த்தராகிய இயேசுவுக்கு ஊழியம் செய்யும், குணமாக்கப்பட்ட, குடிப்பழக்கத்திற்கு அடிமை யாக இருந்த அந்தச் சிறிய பெண்மணி, அவளுக்காகவும் சுவிசேஷத்தின் மீதான அவளது தயவுக்காகவும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். 13 தேவன் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப் பாராக. இப்போது, ஆம், சகோதரரே, இங்கே; இங்கே ஒரு சிறிய மனிதர் கீழே அமர்ந்திருக்கிறார், அவரும் அவரது மனைவியும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இந்தியா னாவின் ஹம்மண்டில் இருந்து எனது ஆராதனைக் கூடாரத்திற்கு, சுமார் இருநூற்று எண்பது மைல்கள் காரில் பயணம் செய்து, அவர்கள் அங்கே இருக்கும்போது கூட்டத்தில் கலந்துகொள்கிறார்கள் என்று நான் நினைக் கிறேன்; தன்னுடனே ஒரு முழு கூட்டத்தையும் அழைத்து வருகிறார். அந்தச் சகோதரரின் பெயர் கூட எனக்குத் தெரியாது, ஆனால் எப்படி யிருந்தாலும் அவர் ஒரு நல்ல மனிதர். தேவனுக்கு அவரைத் தெரியும். 14 நான் தவறாக நினைக்கவில்லை என்றால், சரியாக இங்கே அமர்ந்திருக்கும், சிவப்பு நிற ஸ்வெட்டர் அல்லது அதுபோன்ற ஒன்றை அணிந்திருக்கும் சிறிய பெண்மணி, எனது கூட்டங்களில் ஒன்றில் அவள் ஒருமுறை குணமாக்கப்பட்டாள் என்று நான் நம்புகிறேன், எனக்கு உறுதியாகத் தெரியவில்லை, ஆனால் அவள் ஒருமுறை கட்டியிலிருந்து அல்லது அதைப் போன்ற ஒன்றிலிருந்து குணமாக்கப் பட்டாள் என்று நான் நினைக்கிறேன். 15 [சகோதரர் போஸ் சகோதரர் பிரன்ஹாமிடம் பேசுகிறார்] அது யார்? அவர் எங்கே இருக்கிறார்? ஆஹா, உங்கள் இருதயம் ஆசீர்வதிக்கப்படுவதாக, சகோதரர் ஜான், நான் உங்களைப் பார்க்கவில்லை. நீங்கள் எனக்குப் பின்னால் பக்கவாட்டில் அமர்ந்திருந்தீர்கள், சகோதரர் ஜோசப் வந்து, "ஆம்" என்றார். 16 கூட்டத்தின் போது நீங்கள் எங்கே இருந்தீர்கள்? [சகோதரர் ஜான் சகோதரர் பிரன்ஹாமிடம் பேசுகிறார்] ஆம். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரரே. ஆம். நான் பேசிக்கொண்டிருந்தேன். என் அன்பான சகோதரரே, தேவ சமாதானம் உங்களோடு தங்குவதாக. இங்கே உள்ள இந்த அன்பான முதிய சகோதரர்... [ஒலி நாடாவில் காலியிடம்] 17 வார்த்தையை வாசிப்பதற்காக நீங்கள் இப்போது உங்களது கூர்ந்த கவனத்தை எனக்குத் தாருங்கள். யூதாவின் புஸ்தகத்தில் இந்த வசனங்களை நாம் காண்கிறோம், யூதாவின் புஸ்தகம் 3-வது வசனத்தில். பிரியமானவர்களே, பொதுவான இரட்சிப்பைக் குறித்து உங்களுக்கு எழுதும்படி நான் மிகவும் கருத்துள்ளவனாயிருக்கையில், பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாய்ப் போராடவேண்டுமென்று உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாய்க் கண்டது. கர்த்தர் தமது வார்த்தையின் வாசிப்போடு தமது ஆசீர்வாதங்களைச் சேர்ப்பாராக. 18 இப்போது, இந்தப் புஸ்தகம் கி.பி. 66-ல் எழுதப்பட்டது என்று நான் நம்புகிறேன். அது பெந்தெகொஸ்தே நாளுக்குப் பிறகு முப்பத்து மூன்று ஆண்டுகள் ஆகும். அப்போது சபையிடம் பேசிய யூதா, "பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புவிக்கப்பட்ட விசுவாசத்திற்காக அவர்கள் தைரியமாய்ப் போராடவேண்டும்" என்று அவர்களுக்கு அறிவுறுத்தினார். 19 பரிசுத்த ஆவியானவரால் கிறிஸ்துவுக்குள் மூழ்கி, தொடங்கி வைக்கப்பட்ட அந்தப் பெரிய பரிசுத்த ஆவியின் சபை, இவ்வளவு குறுகிய காலத்தில் மிகவும் சிக்கிக்கொள்ளும் என்றும், அதனால் இங்குள்ள தீர்க்கதரிசி அவர்களிடம், "பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புவிக்கப் பட்ட விசுவாசத்திற்காகத் தைரியமாய்ப் போராடவேண்டும்" என்று சொல்கிறார் என்றும் உங்களால் எப்போதாவது நினைக்க முடியுமா? 20 இப்போது, நாம் அதிக நேரம் எடுத்துக்கொள்ள மாட்டோம். நான் இங்கே கவனமாக இருக்க வேண்டும், ஏனென்றால் ஒரு பெரிய ஆராதனை நமக்கு வரவிருக்கிறது. இந்த இரவில் வரிசையில் என்னால் முடிந்தவரை பல மக்களுக்காக நான் ஜெபிப்பேன். விசுவாசத் திலும், ஜெபத்திலும் உறுதியாக நிற்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். 21 இப்போது, இங்குள்ள தீர்க்கதரிசி விசுவாசத்திற்காகத் தைரியமாய்ப் போராடச் சொல்கிறார், ஏதோ ஒரு விசுவாசத்திற்காக அல்ல, ஆனால் பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புவிக்கப்பட்ட அந்த விசுவாசத்திற்காக. 22 இப்போது, அநேகர் சொல்கிறார்கள், "நல்லது, நான் அந்தக் கூட்டத்திற்குச் செல்வேன், ஆனால் அது எனது விசுவாசத்திற்கு எதிரானது." ஒரே ஒரு விசுவாசம் மட்டுமே உள்ளது: ஒரே விசுவாசம், ஒரே நம்பிக்கை, ஒரே கர்த்தர், ஒரே ஞானஸ்நானம். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? ஒரே விசுவாசம், அந்த விசுவாசம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசமே. இப்போது, சிலர் சொல்கிறார்கள், "நல்லது, நான் ஒரு மெத்தடிஸ்ட். அது எனது விசுவாசத்திற்கு எதிரானது." 23 "நான் ஒரு கத்தோலிக்கன், அது எனது விசுவாசத்திற்கு எதிரானது." ஒரே ஒரு விசுவாசம் மட்டுமே உள்ளது. அந்த விசுவாசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த சபைகளின் வெவ்வேறு பிரிவுகள் இருக்கலாம், ஆனால் ஒரே ஒரு விசுவாசம் மட்டுமே உள்ளது. 24 இப்போது, யூதா கூறினார், நாம், நிச்சயமாக அந்நாளில் இருந்த சபையிடம் முதன்மையாக இங்கு பேசுகிறார், ஆனால், பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புவிக்கப் பட்ட விசுவாசத்திற்காக நாம் தைரியமாய்ப் போராடவேண்டும். 25 இப்போது, அது பழைய ஏற்பாட்டுக்குப் பொருந்தாது. அது புதிய ஏற்பாட்டிற் குரியதாகவே இருக்க வேண்டும், ஏனென்றால் பழைய ஏற்பாடு நியாயப்பிரமாணமாக இருந்தது, இந்தப் பக்கம் கிருபையாக இருக்கிறது. மற்றும்-அது கூறியது, "நியாயப் பிரமாணமும் தீர்க்கதரிசன வாக்கியங்களும்," லூக்கா 16:16, "நியாயப்பிரமாணமும் தீர்க்க தரிசன வாக்கியங்களும் யோவான் ஸ்நானகன் வரைக்கும் இருந்தது: அதுமுதல் தேவனுடைய ராஜ்யம் சுவிசே ஷமாய் அறிவிக்கப்பட்டு வருகிறது." எனவே இது இந்தப் பக்கமாகத்தான் இருக்க வேண்டும், பரிசுத்தமாக்கப்படுதலுடன் இந்தப் பக்கமாகத் தான் இருக்க வேண்டும், ஏனென்றால் பரிசுத்தவான்கள், அதன் பிறகுதான் சபை பரிசுத்தவான்கள் என்று குறிப்பிடப் படுகிறது... பரிசுத்தவான் என்ற வார்த்தைக்கு "பரிசுத்தமாக்கப்பட்டவர்" என்று அர்த்தம். வேறு வார்த்தைகளில் கூறினால், பரிசுத்தமாக்கப் பட்டவர்களுக்கு ஒருவிசை ஒப்புவிக்கப்பட்ட விசுவாசத்திற்காக நாம் போராட வேண்டும். பரிசுத்தமாக்கப்படுதல் என்றால் "அழைக்கப் படுவது, பிரித்தெடுக்கப்படுவது, சுத்திகரிக்கப் படுவது, பாருங்கள், ஊழியத்திற்காகச் சுத்தி கரிக்கப்பட்டுப் பிரித்தெடுக்கப்படுவது" என்று அர்த்தம். 26 இப்போது, அந்த மக்களுக்கு ஒருவிசை ஒப்புவிக்கப்பட்ட விசுவாசம், அந்த விசுவாசத் திற்காகத்தான் நாம் போராட வேண்டும். போராடுதல் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? "விவாதிப்பது அல்லது பற்றிக்கொள்வது" என்பதாகும், அதற்காகப் போராடுவது, அந்த விசுவாசத்திற்காகத் தைரியமாய்ப் போராடுவது. இப்போது, "மெத்தடிஸ்ட் சகோதரர்களே, அது உங்களிடம் இருக்கிறதா?" என்று நான் கேட்டால். "ஆம், அந்த விசுவாசம் எங்களிடம் உள்ளது." "மேலும் பாப்டிஸ்ட் சகோதரர்களே?" "ஆம்." கத்தோலிக்கரும் சொல்வார்கள், "ஆம்." பெந்தெகொஸ்தேகாரரும் சொல்வார், "ஆம்." ஒவ்வொருவரும் சொல்வார்கள், "ஆம், எனது சபை அந்த விசுவாசத்திற்காகப் போராடுகிறது." 27 நல்லது, அதைக் கேட்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அது உண்மை என்று அறிவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன். இப்போது, ஒரே வழி, சரி, நாம் கேட்போம், "அப்படியானால் உங்களை ஒருவரி டமிருந்து ஒருவரை வித்தியாசப்படுத்துவது எது?" "நல்லது, அது இப்படித்தான் இருந்தது என்று நாங்கள் நம்புகிறோம்." 28 இப்போது, வேதத்தின் ஆரம்பப் பகுதிக்கு, ஆரம்பகால ஊழியத்திற்கு, மற்றும் பரிசுத்தவான்களின் நாட்களுக்குச் சென்று, அவர்கள் எத்தகைய விசுவாசத்தைக் கொண்டி ருந்தார்கள் என்று பார்ப்போம், பின்னர் அவர்கள் கொண்டிருந்ததைக் குறித்து நாம் போராடுவோம். உறுதியாக இருப்பதற்கு அதுவே ஒரே வழி. அது சரியா? 29 இப்போது, வேதாகமம் நாம் எதற்காகப் போராட வேண்டும் என்று விரும்புகிறதோ, அந்த விசுவாசத்தை முதலில் அறிமுகப் படுத்தியவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே. அது வருவதைப் பற்றிப் பேச யோவான் முன்னோடியாக இருந்தார், ஆனால் கிறிஸ்துவே அதுவாக இருந்தார். கிறிஸ்துவே, அவர்தான் அந்த விசுவாசத்தைக் கொண்டுவந்தவர், ஏனென்றால் பூமியில் கிறிஸ்து புதிய உடன் படிக்கையின் கீழ் மக்களுக்கான தேவனுடைய பிரதிநிதியாக இருந்தார். 30 கவனியுங்கள், நியாயப்பிரமாணத்தின் நாட்களுக்குப் பிறகு தேவன் கிறிஸ்துவை அனுப்பினார்; நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப் பட்டவர்களை மீட்டுக்கொள்ளும்படி, அவரை நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்ட ஒரு ஸ்திரீயினிடத்தில் பிறந்தவராக்கினார். கிறிஸ்து மனித மாம்சத்தில் உருவானார், அவரே தேவன், இம்மானுவேல், முதலீடு செய்யப் பட்டவர், தேவன் உலகத்தைத் தம்மோ டே ஒப்புரவாக்கிக் கொண்டு கிறிஸ்துவுக்குள் இருந்தார். 31 அவர் இங்கே பூமியில் இருந்தபோது, அவர் தனது சொந்த எண்ணங்களை, தனது சொந்த சித்தத்தைப் பின்பற்றவில்லை, ஆனால் அவர் தனது பிதாவின் சிந்தையையும் சித்தத்தையும் பின்பற்றத் தனது சொந்த சித்தத்தையும் தனது சொந்த எண்ணங்களையும் தியாகம் செய்தார். "என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படியே செய்ய வந்திருக்கிறேன்." நீங்கள் அதைப் பார்க்கிறீர்களா? 32 இப்போது, பிதாவின் சித்தத்தைச் செய்யவே கிறிஸ்து வந்தார். ஆகையால் கிறிஸ்து என்ன செய்தார் என்பதையும், அவர் மக்களுக்கு எத்தகைய விசுவாசத்தைக் கொடுத்தார் அல்லது மக்களுக்குப் பிரசங்கித்தார் என்பதையும் நாம் காண முடியுமானால், அதுவே நாம் போராட வேண்டிய விசுவாசமாக இருக்க வேண்டும். 33 இப்போது, கிறிஸ்து இங்கே பூமியில் இருந்தபோது நாம் ஆச்சரியப்படுகிறோம், அவர் ஒரு சாதாரண ஆண் குழந்தையாக, ஒரு முன்னணையில் பிறந்தார். அவர் ஒரு பெரிய அளவிலான-ஆரவாரங்களுடன் உலகத்திற்கு வரவில்லை. அவர் ஒரு முன்னணையில் பிறந்த எளிய பெற்றோருக்குப் பிறந்து, வளர்க்கப்பட்டு, சென்று, தனது மக்களுடன் வளர்க்கப்பட்டார். 34 அவருக்கு முப்பது வயதானபோது, அவர் வனாந்தரத்திற்குச் சென்று, அங்கே யோவானைச் சந்தித்து, யோர்தானில் யோவானால் ஞானஸ் நானம் பெற்றார், கீழ்ப்படிந்து, அல்லது, நிறைவேற்றி... யோவான் அவர் வருவதைக் கண்ட போது, "நான் உம்மாலே ஞானஸ்நானம் பெற வேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா?" என்றார். 35 அவர், "இப்பொழுது இடங்கொடு, எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது" என்றார். அதன்பின் அவர் யோவானால் ஞானஸ்நானம் பெற்று, உடனே தண்ணீரிலிருந்து கரையேறினார், இதோ வானம் அவருக்குத் திறக்கப்பட்டது. 36 தேவ ஆவியானவர் ஒரு புறாவைப்போல வானத்திலிருந்து இறங்கி, அவர் மேல் தங்கு வதைக் கண்டதாக யோவான் சாட்சி பகர்ந்தார். மேலும் யோவான் கூறினார், "நான் அவரை அறியாதிருந்தேன், ஆனாலும் ஞானஸ்நானம் கொடுக்கும்படி வனாந்தரத்திற்குப் போக எனக்குச் சொன்னவர், 'யார் மேல் ஆவியானவர் இறங்கித் தங்குவதை நீ காண்பாயோ, அவரே பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுக்கிறவர்' என்று எனக்குச் சொல்லியிருந்தார்." 37 அதுதான் மேசியா என்பதற்கு யோவா னிடம் ஒரு அடையாளம் இருந்தது. அவர் வருவதைக் கண்டபோது, அவரே மேசியா என்பதை அவர் அறிந்துகொண்டார். இப்போது, அவர் மற்ற எந்த மனிதனைப் பார்க்கிலும் வித்தியாசமாக ஆடை அணிந்திருக்கவில்லை. இயேசு ஒரு சாதாரண மனிதராகவே இருந்தார். "நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது" என்று வேதாகமம் கூறுகிறது. அவர் ஏழு அடி உயரமுள்ள ஒரு பெரிய மனிதராக இல்லை. நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது. 38 இந்த உலகத்தின் கல்வியறிவு அவருக்கு அதிகமில்லை என்று நான் கருதுகிறேன், ஏனென்றால் அவர் எப்போதாவது பள்ளிக்குச் சென்றார் என்பதற்கான எந்தப் பதிவும் நம்மிடம் இல்லை, அவர் பள்ளிக்குச் சென்றார் என்பதற்கு வேதத்திலோ அல்லது வரலாற்றிலோ எந்தப் பதிவும் இல்லை. ஆனால் நிச்சயமாக அவருக்கு ஒரு கல்வியறிவு இருந்தது. ஆனால் அதை அவர் எங்கே பெற்றார் என்பது நமக்குத் தெரியாது. இப்போது, நம்மிடம் பவுல்-பவுல் எங்கே பள்ளிக்குச் சென்றார் என்பதற்கான பதிவு உள்ளது, மற்றும் மற்றவர்களுடையதும் உள்ளது, ஆனால் இயேசு எங்கே பள்ளிக்குச் சென்றார் என்பதற்கான எந்தப் பதிவும் நம்மிடம் இல்லை. 39 அவர் ஒரு சாதாரண மனிதர்தான், சாதாரண மொழியைப் பேசினார், தெருவில் நீங்கள் பயன்படுத்தும் மொழியைப் போல, அனைவரும், சாதாரண மக்கள் கேட்கும் மொழியைப் பேசினார். 40 ஆகையால், அவர் எப்படிப்பட்டவராக இருந்தார் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளும் அளவிற்கு, அவருடைய தோற்றத்திலும் மற்றவைகளிலும் சிறப்பானதாக எதுவும் இல்லை. அவர் எப்படிப்பட்டவராக இருந்தார் என்பது வெளிப்புறத் தோற்றத்தினால் அல்ல, அவர் வெளிப்புறத்தில் ஒரு மனிதராக இருந்தார், ஆனால் உள்ளத்தில் அவர் தேவனாக, இம்மானுவேலாக இருந்தார். பிதாவாகிய தேவன் உலகத்தைத் தம்மோடே ஒப்புரவாக்கிக் கொண்டு அவருக்குள் இருந்தார். எனவே அங்கே அவர் கிறிஸ்தவ விசுவாசத்தைக் கொண்டுவந்தார். 41 இப்போது, நாம் அவரைக் கவனிப்போம். அவரை வித்தியாசப்படுத்தியது எது? ஒரு பேச்சாளராக அவர் அந்த அளவுக்கு வற்புறுத்துபவராகவும், நாம் செய்வதைப் போலத் தெருக்களில் இறங்கி சத்தமிடுப வராகவும் இருக்கவில்லை என்று நான் யூகிக்கிறேன், ஏனென்றால், "அவருடைய சத்தம் வீதியிலே கேட்கப்படவில்லை. நெரிந்த நாணலையும் மங்கியெரிகிற திரியையும்," அவர் இருப்பார் என்று தீர்க்கதரிசி சொன்னதுபோல பைபிள் கூறுகிறது. 42 ஆகையால், அவருடைய பேச்சில் ஏதோ ஒன்று மக்களின் இருதயங்களைக் கவர்ந்தது. வெளிப்புறமான வெளிப்பாட்டில் அவர் அந்த அளவுக்கு வற்புறுத்துபவராக இருக்க வேண்டி யதில்லை, ஆனால் அவருடைய பேச்சின் ஆழத்தில் மக்களின் இருதயங்களை வசீகரிக்கும் ஏதோ ஒன்று இருந்தது. 43 சிறந்த ஊழியர்கள் பேசுவதைக் கேட்பதற்கு நான் அடிக்கடி எவ்வளவு விரும்பியிருக்கிறேன், அவர்களைக் கேட்பதை நான் எவ்வளவு நேசிக்கிறேன். ஆனால் இயேசு தமது கரங்களை நீட்டி, "வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்," என்று சொன்ன அந்த நாளில் அங்கே நின்றிருந்தால் நான் எப்படி உணர்ந்திருப்பேன் என்று நான் அடிக்கடி ஆச்சரியப்பட்டிருக்கிறேன். ஓ, அதைக் கேட்ப தற்கு நான் மிகவும் விரும்பியிருப்பேன். 44 ஒருவேளை, அவர் தம்முடைய மலைப் பொழிவை வழங்கியபோது, அங்கிருந்த பாறையின்மேல் அமர்ந்திருந்த அவரைச் செவிகொடுத்துக் கேட்பதற்கு நான் விரும்பி யிருப்பேன். "இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள். என் நிமித்தம் மனுஷர்கள் உங்களை நிந்தித்து, உங்களைத் துன்புறுத்தி, பலவிதமான கேலிகளைச் செய்யும்போது நீங்கள் பாக்கிய வான்கள். சந்தோஷப்பட்டு, மிகவும் களி கூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்புறுத் தினார்களே," என்று சொன்னார். பார்க்கிறீர்களா? 45 ஓ, அவர் அதைப் பிரசங்கிப்பதைக் கேட்பதற்கு நான் மிகவும் விரும்பியிருப்பேன். ஆனால் நான் அடிக்கடி சொல்வது போல, "நான் அநேகமாக அதை ஒருபோதும் கேட்க முடியாது, ஆனால் இதைக் கேட்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது: 'நல்லது, உத்தமமும் உண்மையுமான ஊழியக்காரனே.' அதை மட்டும் என்னால் கேட்க முடிந்தால் போதும், அதுவே என்னைச் சரியாகத் திருப்திப்படுத்தும்." 46 கவனியுங்கள், அவர் இங்கே பூமியில் இருந்தபோது, பேதுரு அப்போஸ்தலர் 2-ம் அதிகாரத்தில், பரிசுத்த ஆவியின் ஞானஸ் நானத்தைப் பெற்ற பிறகு, "இஸ்ரவேலரே, நசரேயனாகிய இந்த இயேசு, உங்களுக்குள்ளே தேவனால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மனுஷன்..." எதனால்? அவருடைய இறையியலாலா? இல்லை. சபையில் அவருக்கு இருந்த உயர்ந்த நிலையாலா? இல்லை. அவருடைய பட்டத் தாலா? இல்லை. அல்லது அவருடைய சிறந்த பேச்சாலா? இல்லை. "இஸ்ரவேலரே, நசரேயனாகிய இயேசு, உங்கள் நடுவில் தேவன் அவராலே செய்த அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் உங்களுக்குள்ளே தேவனால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மனுஷன், அதற்கு நீங்கள் அனைவரும் சாட்சிகளாயிருக்கிறீர்கள்..." ஆஹா, அது நேரடியாக நெஞ்சிலிருந்து வந்தது அல்லவா? "நீங்கள் அக்கிரமக் காரருடைய கைகளினாலே ஜீவாதிபதியைச் சிலுவையில் அறைந்து கொன்றீர்கள், ஆனால் தேவன் அவரை மீண்டும் எழுப்பினார்," என்றார். ஆமென். நான் அதை விரும்புகிறேன். 47 "நீங்கள் அவரைச் சிலுவையில் அறைந்தீர்கள், ஆனால் அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கச் சாத்தியமில்லை. எனவே மரணம் அவரை விடுவிக்க வேண்டியதாயிற்று, அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார். நாங்களே அவருக்குச் சாட்சிகள்," என்றார். ஆமென். "உதாரணமாக, வாசலில் இருந்த சப்பாணி குணமாக்கப்பட்டது போன்ற இந்தக் காரியங்கள் அதனால்தான் செய்யப்படுகின்றன." "இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மீதமுள்ள விசுவாசத் தினால் இந்த மனுஷன் முழுமையாக் கப்பட்டான்," என்றார். காண்கிறீர்களா? "நீங்கள் சிலுவையில் அறைந்த ஜீவாதிபதி." "தேவன் அவரை நிரூபித்தார்," என்றார். அவருக்கு எந்தவொரு... அவர் மாபெரும் இளவரசனைப் போன்ற தோற்றமுடையவராக இருக்கவில்லை. உலகம் பார்க்கிற எந்தக் காரியங்களாகவும் அவர் இருக்கவில்லை. "ஆனால் தேவன் அவருடன் இருந்தார், ஏனென்றால் அவர் உங்கள் அனைவரின் நடுவிலும் செய்த அடையாளங் களினாலும் அற்புதங்களினாலும், அவர் தம்முடன் இருந்தார் என்பதை உங்கள் அனைவர் முன்பாகவும் நிரூபித்தார்." 48 அப்போஸ்தலர்கள் கிறிஸ்தவ விசுவா சத்தைப் பற்றி இப்படித்தான் நினைத்தார்கள். ஏறக்குறைய இரண்டு மில்லியன் மக்களைக் கொண்ட மாபெரும் திருச்சபை மண்டலம், பரிசேயர்கள் மற்றும் சதுசேயர்கள், மாபெரும் ஆலோசனைச் சங்கங்கள் (Sanhedrin courts) என்ன நினைத்தன? அவர்கள் ஒரு நாள் இரவில் நிக்கொதேமு என்ற ஒரு பிரதிநிதியை அனுப்பினார்கள். அவர் இரவில் வந்தார். 49 அவர் இரவில் வந்ததற்காக உங்களில் சிலர் அவரைப் பார்த்து சிரிக்கிறீர்கள்; இறுதியாக அவர் வந்து சேர்ந்தார். நீங்கள் சேர்ந்தீர்களா? நிக்கொதேமு செய்த அளவிற்காவது நீங்கள் செய்திருக்கிறீர்களா? அவர் இறுதியாக அங்கே சென்று சேர்ந்தார். அவர் இயேசுவிடம் சென்றார். 50 சரி. அவர் வந்தபோது, இப்போது அவரைப் பாருங்கள்: ஒரு அறிஞர், டிப்ளோமா இல்லாத ஒரு மனிதரிடம் வரும் ஒரு அறிஞர். அது ஒரு பிரபு, அறிவிற்காக ஒரு ஏழையிடம் வருவது போலிருந்தது. இங்கே பெரிய பட்டங்கள் பெற்ற ஒரு மனிதர், எந்தப் பட்டமும் இல்லாத ஒரு மனிதரிடம் வந்தார். அது ஒரு முதிர்ந்த ஞானியும் போதகருமானவர், நித்திய ஜீவனைப் பற்றிக் கற்றுக்கொள்ள ஒரு இளைஞரிடம் வருவது போலிருந்தது. வித்தி யாசத்தைப் பார்க்கிறீர்களா? 51 இப்போது, அவர் தன் சபை மற்றும் அதுபோன்ற காரியங்களின் காரணமாக, இரவிலே சந்துகள் வழியாகத் தம் வழியை அமைத்துக் கொண்டு வந்தார். ஆனால் நிக்கொதேமு (அவர் சொல்வதைக் கேளுங்கள்.), சபைக்காகவும், ஆலோசனைச் சங்கத்திற்காகவும், தேவாலயத்திற்காகவும், பரிசேயர்களுக்காகவும், சதுசேயர்களுக்காகவும், ஆலோசனைச் சங்க உறுப்பினர்களுக்காகவும், மற்றும் பிறருக்காகவும் அவர் குரல் கொடுத்தார். "ரபீ, அல்லது போதகரே, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம்," என்று அவர் கூறினார். "நாங்கள்," நாங்கள் என்பது யார்? "உங்களைத் துன்புறுத்தி, உங்களைக் கேலி செய்து, உங்களைப் பார்த்து சிரித்த யூதர்களாகிய நாங்கள், நீதிமன்றங்களைச் சேர்ந்த நாங்கள், ஜெப ஆலயங்களைச் சேர்ந்த நாங்கள், ஆனால் நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம்." ஏன்? "ஏனென்றால் நீங்கள் சொல்வன்மையுள்ள ஒரு மனிதர், மேலும் சிறந்த பேச்சு, இனிமையான குரல் என்பதாலா?" "இல்லை." "அப்படியானால் உங்களுக்கு எப்படித் தெரியும்?" 52 "நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம், ஏனெனில் தேவன் ஒருவருடன் இருந்தாலொழிய நீர் செய்கிற காரியங்களை, நீர் செய்கிற அற்புதங்களை ஒருவனும் செய்ய முடியாது." அது அவர்தான் என்பதை அவர்கள் அறிந்தி ருந்தார்கள், ஆனால் முன்முடிவு, சுயநலம் காரணமாகவும், தங்கள் சொந்தச் சூழ் நிலைகளைத் துறந்து அவரை ஏற்றுக் கொள்வதற்குச் சுய-மறுப்பு கொள்ளத் தயாராக இல்லாததாலும் அப்படிச் செய்தார்கள். இருப்பினும் அது தேவனால் உண்டானது என்பதை அவர்கள் அங்கீகரித்தார்கள். 53 செய்தித்தாள்களைப் படித்துவிட்டு, கூட்டத்திற்கு வருகிற இந்த நகரத்திற்குப் போக்குச் சொல்ல வழியில்லை. தேவன் இங்கே இறங்கி வந்து அசைவாடி, அற்புதங்களைச் செய்கிறார் என்பது அவர்களுக்குத் தெரியும். தெய்வீக சுகமளிப்பைப் பார்த்து சிரிப்பவர்கள், ஜீவனுள்ள தேவனுடைய சபையைப் பார்த்து சிரிப்பவர்கள், அவர்களைக் குறுகிய மனப் பான்மை கொண்டவர்கள் என்று சொல்லு கிறவர்கள்; அவர்களுக்குப் போக்குச் சொல்ல வழி யில்லை. அதுதான் சத்தியம் என்பது அவர்களின் இருதயத்தின் ஆழத்தில் அவர்களுக்குத் தெரியும். அதை ஒப்புக்கொள்ள அவர்கள் பயப் படுகிறார்கள், தங்களின் சமூக அந்தஸ்தில் சிலவற்றை இழந்துவிடுவோமோ என்று பயப்படுகிறார்கள். நான் எனது சமூக அந்தஸ்து அனைத்தையும் இழந்து பரலோகத்தை ஆதாயப்படுத்திக்கொள்ளவே விரும்புவேன், நீங்கள் விரும்ப மாட்டீர்களா? உண்மையாகச் சொல்வதானால், இழப்பதற்கு என்னிடம் எந்தச் சமூக அந்தஸ்தும் இருக்கவில்லை. 54 ஆனால் கிறிஸ்து என்னை ஏற்றுக் கொண்டார், இப்போது நான்-நான் ஒரு குழந்தை. நமக்காக அவர் என்னவாக இருந்தார் என்பதைப் பாருங்கள். அவருடைய ஐசுவரி யத்தில் அவர் தரித்திரரானார், அவருடைய தரித்திரத்தினாலே நாம் ஐசுவரியவான்களாகும் படி அப்படி ஆனார். தமது அழியாமையில் அவர் மாம்சமானார், அவர் நமது வியாதிகளைச் சுமந்து கொள்ளும் படிக்கும், அவருடைய வியாதி யிலே நாம் சுகம் பெறும்படிக்கும் அப்படி ஆனார். என்னுடைய எல்லாப் பாவங்களிலும் அவர்... அவர் பாவம் அறியாதவராக இருந்தார், நான் பாவமில்லாதவனாக மாறும்படிக்கு, அவர் என் பாவத்தை ஏற்றுக்கொண்டார். நான் அவராக மாறும்படி அவர் நானானார். 55 பரலோகத்தில் அவர் என்னுடைய மற்றும் உங்களுடைய பிரதிநிதியாக நிற்கிறார். அப்பொழுது தேவன் நம்மைப் பார்ப்பதில்லை; அவர் நமது பிரதிநிதியைப் பார்க்கிறார். ஓ, அது ஆச்சரியமாக இல்லையா? கிறிஸ்து நமது ஸ்தானத்தில் நின்று, பிதாவுக்கு முன்பாக நம்மைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். 56 நீங்கள் எப்போதாவது ஒரு நீதிமன்ற விசாரணையில் இருந்திருக்கிறீர்களா? அந்தப் பிரதிநிதி, அவர் நமக்காக வாதாட நிற்கும் நமது வழக்கறிஞராக நிற்கிறார். நாம் அறிக்கை செய்தால், பாவிகளாகிய நம்முடைய வழக்கை வாதாடுவதற்காக, அவர் பிதாவின் சொந்த குமாரனாய் தேவனுடைய சமுகத்தில் நிற்கும் போது, அவரை விடச் சிறப்பாகச் செய்ய யாருக்குத் தெரியும்? 57 ஐசுவரியமுள்ளவராயிருந்தும், தரித்திர ரானார், அவருடைய தரித்திரத்தினாலே நாம் ஐசுவரியவான்களாகும்படிக்கு அப்படி ஆனார். எதில் ஐசுவரியம்? பணத்திலா? இல்லை. பரலோக ஆசீர்வாதங்களில், ஆவிக்குரிய காரியங்களில் ஐசுவரியம்; ஒரு காலத்தில் தரித்திரர்களாயிருந்த நாம், இப்போது அவரு டைய தரித்திரத்தின் மூலமாக ஐசுவரியவான் களாகிவிட்டோம். 58 அவரைக் கவனியுங்கள். மேலிருந்து வந்த மாபெரும் தெய்வீகமானவர், தம்மைத் தாமே வெறுமையாக்கி, தம்மைத்தாமே தாழ்த்தி, கீழே இறங்கி வந்தார். தா... தாழ்மையில் கீழே இறங்கி வந்து தம்மைத்தாமே தாழ்த்திக் கொண்டார், மனிதர்களிடையே நடமாடவும், மனிதர்களின் சபிப்பதையும் தூஷிப்பதையும் கேட்கவும், வியாதி மற்றும் மரணத்தின் வேதனைகளைத் தம்மீது உணருவதற்காகவும் ஒரு மாம்ச சரீரத்தில் தம்மைத்தாமே தாழ்த்தினார், அதையெல்லாம் அவர் செய்ய வேண்டிய கட்டாயத்தினால் அல்ல, மாறாக அன்பு அவரை அதற்குத் தூண்டியதாலேயே செய்தார். அவர் அதையெல்லாம் செய்து, வியாதிப்பட்டார், துன்பங்களையும் அடைந்தார். 59 "அவர் வியாதிப்பட்டாரா?" என்று நீங்கள் கேட்கிறீர்கள். நிச்சயமாக. அவர் தமது சொந்த காரியத்தை, தமது சொந்த-தமது சொந்த அறிக்கையைத் தாமே உருவாக்கி, "அவர்கள் என்னிடம், 'வைத்தியனே, உன்னை நீயே குணமாக்கிக்கொள்' என்று சொல்ல மாட்டார்களா?" என்று சொல்லவில்லையா? நிச்சயமாக, அவர் நமது வியாதிகளை, நமது துக்கத்தை, நமது பாவத்தை, நமது வேதனையைச் சுமந்தார். அவர் என்னவாக இருந்தார் என்பதைப் பார்க்கிறீர்களா? 60 இப்போது, அவரைப் பற்றித்தான் அப்போஸ்தலர்கள் பேசினார்கள்; அவரைப் பற்றித்தான் நிக்கொதேமு பேசினார். அவர் என்னவாக இருந்தார் என்று பார்ப்போம். கிறிஸ்தவ விசுவாசத்திற்கு அவர் எந்த வகையான பிரதிநிதியாக இருந்தார்? 61 அவர் இங்கே பூமியில் இருந்தபோது, அவர் தம்மீது எந்தப் பெயரையும் எடுத்துக் கொள்ளவில்லை. அவர் அப்படிச் செய்ய வில்லை என்று பைபிள் கூறுகிறது. அவர் தமக்கென்று எந்தப் புகழையும் தேடிக் கொள்ளவில்லை. நான் பலமுறை இதை நினைத்திருக்கிறேன்: பற்களுக்கான பொய்ப் பல்வரிசையைச் செய்த மனிதன், அதில் தனக்கொரு புகழை உருவாக்கிக்கொண்டான். ஆனால் உண்மையான பற்களை உருவாக்கியவர் தமக்கென்று எந்தப் புகழையும் தேடிக் கொள்ளவில்லை. செயற்கைக் காலை உரு வாக்கிய மனிதன் தனக்கென்று ஒரு புகழை உரு வாக்கிக் கொண்டான், ஆனால் உண்மையான காலை உருவாக்கியவர் தமக் கென்று எந்தப் புகழையும் தேடிக் கொள்ள வில்லை. காண்கிறீர்களா? 62 உங்களையும் என்னையும் இரட்சிக்க, உங்களையும் என்னையும் குணமாக்க அவர் தம்மைத்தாமே வெறுமையாக்கிக்கொண்டு கீழே இறங்கி வந்தார். மாபெரும் வைத்தியர், பரலோகத்தின் தேவன், அழியாதவர், நமது வியாதிகளை அகற்றுவதற்காக வியாதியைத் தமது சொந்த சரீரத்தில் நிலைநிறுத்தும்படி மாம்சத்தை அணிந்துகொண்டார். அது ஒரு போதும் அறியப்படாது. தேவன் நமக்காகக் கிறிஸ்து இயேசுவுக்குள் செய்ததை வார்த்தை களால் வெளிப்படுத்த முடியாது. 63 அவர் இங்கே பூமியில் இருந்தபோது தம்மைப் பற்றிப் பெருமை பேசிக் கொள்ளவில்லை. பிதாவின் சித்தம் என்ன என்பதைச் செய்வதைத் தவிர வேறு எதையும் அறியாமல் அவர் வந்தார். அவருக்குப் பெரிய காரியங்கள் வழங்கப்பட்டன. சாத்தான் கூட அவரிடம், "நீர் சாஷ்டாங் கமாய் விழுந்து என்னைச் பணிந்துகொண்டால், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் நான் உமக்குக் கொடுத்து, அவற்றின்மேல் உம்மை எஜமானராக்குவேன்," என்று சொன்னான். அவர், "அப்பாலே போ சாத்தானே. உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே," என்றார். நிச்சயமாக. 64 அவர் உலகத்தின் எல்லா ராஜ்யங் களையும் பெற்றிருக்க முடியும். எப்படியி ருந்தாலும் அவர் அவற்றைப் பெறுவார். அவர் அவற்றுக்குச் சுதந்தரவாளியாகிறார். அவர் எல்லாவற்றிற்கும் சுதந்தரவாளியாயிருக்கிறார். நாமும் அவருடன் சுதந்தரவாளிகளாகவும், ராஜ் யத்தில் உடன்சுதந்தரவாளிகளாகவும் இருக்கி றோம். 65 "இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கிய வான்கள்: அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள். சாந்த குணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்: அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்." அது அவருடைய பிரசங்கம், அவர் நமக்குத் தந்தது, அவருடைய வாக்குத்தத்தங்கள். அது அவராகவே இருந்தது. 66 இப்போது, அவரைக் கவனியுங்கள். அவர் இங்கே பூமியில் இருந்தபோது, அவருடைய சில கிரியைகளை நாம் காண்கிறோம். கிறிஸ்தவ விசுவாசத்தில் அவர் என்ன அர்த்தப்படுத்தினார் என்பதை இப்போது பார்ப்போம். அவர் இங்கே இருக்கிறார். அனைத்து கிறிஸ்தவத்தின் நீரோடை, தலைவர், துவக்கம், கிறிஸ்தவ விசுவாசத்தின் தோற்றம், தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவே, அவரே கிறிஸ்தவ விசுவாசத்தின் துவக்கம், எல்லா காலங்களிலும் உள்ள அனைத்து மனிதகுலமும் அந்தத் தொடக்க இடத்தை நோக்கிப் பார்த்து அங்கிருந்து தொடங்குவதற்கான தொடக்க இடமாக அவர் இருந்தார். அவர் நமக்கு ஒரு முன்மாதிரியாக இருந்தார். அது சரியா? 67 புனித யோவான் 13-ம் அதிகாரத்தில், பாதங்களைக் கழுவுதல் கொண்டு வரப்பட்ட போது, அவர் சொன்னார்... பேதுருவை கவனியுங்கள், தன்னைத்தானே பெருமைப் படுத்திக்கொண்ட, இந்தப் பேதுரு-பேதுரு பாதுகாப்பாக, விதண்டாவாதம் செய்து, விறைப்பான காலர் வைத்தவரைப்போல் அங்கே நின்றார். அவர் பேதுருவின் பாதங்களைக் கழுவ நடந்து சென்றார். "நீர் ஒருக்காலும் என் பாதங்களைக் கழுவ மாட்டீர்," என்று அவர் சொன்னார். ஓ, ஆஹா. இன்று நம்மிடம் அப்படிப்பட்டவர்கள் பலர் இருக்கிறார்கள். "நீர் ஒருக்காலும் என் பாதங்களைக் கழுவ மாட்டீர்." இயேசு அவரைப் பார்த்து, "சரி, நான் உன்னைக் கழுவாவிட்டால், என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை," என்று சொன்னார். பேதுரு, "அப்படியானால் ஆண்டவரே, என் பாதங்களை மாத்திரமல்ல, என் கைகளையும் என் தலையையும்கூட கழுவும்," என்றார். அது அவரின் பெருமையைச் சற்றே தளர்த்தியது, அல்லவா? 68 ஓ, அந்த அன்பான வார்த்தைகளை நான் கற்பனை செய்து பார்க்கிறேன், பேதுருவைச் சுற்றிப் பார்த்து, "இப்போது, இப்போது... நான்-நான் உன்னைக் கழுவாவிட்டால், என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை, நீ என் கட்டளையைப் பின்பற்ற முடியாவிட்டால், நீ பிதாவின் சித்தத்தைச் செய்ய முடியாவிட்டால்; பேதுரு, நான் உன்னை நேசிக்கிறேன், ஆனால் நீ இந்தக் காரியங்களைச் செய்தாக வேண்டும்," என்று சொல்வதை. அது கிறிஸ்தவ விசுவாசத்தின் ஒரு பகுதியாகும். 69 சீஷர்களின் பாதங்களைக் கழுவி முடித்த பிறகு, அவர் அமர்ந்து, "இப்போது, நீங்கள் என்னை ஆண்டவர் என்றும் போதகர் என்றும் அழைக்கிறீர்கள்: நீங்கள் சொல்வது சரியே; நான் அப்படியே இருக்கிறேன். ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் பாதங்களைக் கழுவினதுண்டானால்; நீங்களும் ஒருவருக் கொருவர் பாதங்களைக் கழுவக் கடனாளிகளா யிருக்கிறீர்கள். ஏனெனில்..." அதைக் கவனமாகக் கேளுங்கள். "நான் உங்களுக்குச் செய்தது போல நீங்களும் ஒருவருக்கொருவர் செய்யும் படிக்கு உங்களுக்கு ஒரு முன் மாதிரியைக் காண் பித்தேன்," என்றார். அவரே கிறிஸ்தவத்தின் முன் மாதிரியாக இருந்தார். அவரே கிறிஸ்த வமாக இருந்தார். அவரே நமது முன்மாதிரியாக இருந்தார். 70 உங்கள் வாழ்க்கையை இங்கே பூமியில் உள்ள சில போதகர்களையோ, சில ஆசாரியர் களையோ, சில சிறந்த மதத் தலைவர்களையோ பின்பற்றி அமைத்துக்கொள்ள ஒருபோதும் முயற்சிக்காதீர்கள், ஆனால் உங்கள் வாழ்க் கையைக் கிறிஸ்துவைப் பின்பற்றி அமைத்துக் கொள்ளுங்கள். அவரே உங்கள் முன்மாதிரி. அவர் ஒரு முன்மாதிரியை வைத்தார். அவர் ஒரு முன்மாதிரியாக வாழ்ந்து, அதனைச் சபைக்கு முன்வைத்தார். ஓ, அது மிகவும் ஆழமாகப் பதியும் என்று நம்புகிறேன். 71 மக்கள் ஏன் சுவிசேஷத்தைக் கேட்க விரும்புவதில்லை? காண்கிறீர்களா? கவனி யுங்கள், ஆழமாகப் பதிய வையுங்கள். 72 அவர் தாமே முன்மாதிரி என்று சொன்னார். இப்போது, நாம் அவரைப் பார்க்கிறோம்; அவர் எத்தகைய முன்மாதிரியை வைத்தார் என்பதைக் கவனியுங்கள். "என்னாலே சுயமாக நான் ஒன்றும் செய்ய முடியாது," என்று சொல்லிக்கொண்டே அவர் வெளியே நடந்தார். அப்போது சற்றே அலட்சியமான மனப் பான்மையுடன் ஒருவர் அவரிடம் வந்து, கூட்டத்தாரைச் சுற்றிப் பார்த்தார், அங்கே நின்றுகொண்டிருந்த இயேசு அவரைச் சுற்றிப் பார்த்தார்; அவர், "இதோ, கபடற்ற இஸ்ரவேலன்," என்று சொன்னார். 73 பிலிப்பு சென்று நாத்தான்வேலைக் கண்டபோது, வெளியே அந்த மரத்தினடியில் ஜெபித்துக் கொண்டிருந்த அவரைத் திரும்ப அழைத்துவந்து, "இங்கே வா. நாங்கள் யாரைக் கண்டோம் என்பதை உனக்குக் காண்பிக்க விரும்புகிறேன்: யோசேப்பின் குமாரனாகிய, நசரேயனாகிய இயேசுவை," என்றார். அதற்கு, தன்னைத்தானே பெருமைப் படுத்திக்கொண்ட இந்த மனிதர், "ஏன், நசரேத்திலிருந்து ஏதாகிலும் ஒரு நன்மை வரக்கூடுமா?" என்று கேட்டார். "வந்து பார்," என்றார். அதைக் கண்டறிய அதுவே சிறந்த வழி. சென்று, கண்டறியுங்கள். "வந்து பார்," என்றார். 74 சரி, அவர் அங்கே வந்தார், உங்களுக்குத் தெரியும், அவர் ஒரு நல்ல மனிதர், நல்ல ஒழுக்கமுள்ள மனிதர், மிகவும் நேர்மையானவர், அவர் கூட்டத்தில் அங்கே நின்றுகொண்டிருந்த இயேசுவின் முன்பாக நடந்து சென்றார், இயேசு சுற்றிலும் பார்த்துக்கொண்டிருந்தார். அவர் இயேசுவைக் கேட்டபோது, அல்லது அவர் சில நோயாளிகளுக்காக ஜெபிப்பதை அல்லது அதுபோன்ற எதையாவது பார்த்த போது, அவருடைய இருதயம் சற்றே உருகத் தொடங்கியிருக்கும் என்று நான் கற்பனை செய்கிறேன். 75 உங்களுக்குத் தெரியும், அவர் பிலிப்பிடம் ஒரு வார்த்தை சொல்வதை என்னால் ஏறக்குறைய கேட்க முடிகிறது: "சொல் பிலிப்பு, அந்த மனிதர் நாம் பார்க்கிற சாதாரணப் பிரசங்கியிலிருந்து சற்று வித்தியாசமானவராக இருக்கிறார்." ஓ, ஆஹா! அவர் வித்தியாசமானவரா! "அவர் சற்றே வித்தியாசமானவர். அவர் பேசும் விதத்தை நான் ஓரளவுக்கு விரும்புகிறேன்," என்று அவர் கூறினார். 76 நாத்தான்வேல் கூறுவதை நான் கேட்கிறேன், "சரி, நான்-நான்-நீர் அவரைப் பார்த்து, ஒருமுறை அவர் சொல்வதைக் கேட்கும்போது உமது மனதை மாற்றிக்கொள்வீர் என்று நினைத்தேன். நீர் கீழே அங்கிருந்தபோது உமது கருத்தை வெறுமனே தெரிவித்துக் கொண்டு, 'நசரேத்திலிருந்து ஏதாகிலும் ஒரு நன்மை வரக்கூடுமா' என்று சொன்னீர்." 77 அந்த நேரத்தில், இயேசு தமது அன்பான தலையைத் திருப்பி, தமது பெரிய, மென்மையான கண்களால் அங்கே பார்த்து, "இதோ, கபடற்ற இஸ்ரவேலன்," என்று சொன்னார். அது அவரை உலுக்கியது. "என்னையா?" என்றார். "கண்ணியத்திற் குரியவரே, அல்லது ரபீ, என்னை உமக்கு எப்படித் தெரியும்?" என்று கேட்டார். அவர், "பிலிப்பு உன்னை அழைப்பதற்கு முன்பே, நீ அத்திமரத்தின் கீழிருந்தபோது உன்னைக் கண்டேன்," என்றார். அங்கேதான் கிறிஸ்தவத்தின் முன்மாதிரி இருக்கிறது. அது சரிதான். 78 அவர் கிணற்றின் அருகே ஒரு ஸ்திரீயைச் சந்தித்து, சீஷர்களை அனுப்பிவிட்டார். கொஞ்சம் உணவு, கொஞ்சம் போஜனப் பதார்த் தங்களை வாங்குவதற்காக அவர்கள் நகரத் திற்குள் சென்றார்கள், அவர்கள் சென்றிருந்த போது, அந்த ஸ்திரீ வருவாள் என்பதை இயேசு அறிந்திருந்தார், ஏனென்றால், "பிதா தமக்குக் காண்பிக்கிறதைக் கண்டாலொழிய அவர் தாமாயொன்றும் செய்யமாட்டார்" என்று அவர் சொல்லியிருந்தார். 79 எருசலேமிலிருந்து நீங்கள் நேராக எரிகோவிற்குச் செல்லலாம், ஆனால் அவர் சமாரியாவின் வழியாகச் சென்றார். ஏன் என்று ஆச்சரியமாக இருக்கிறது. அவர் சமாரியா வழியாகப் போக வேண்டியதாயிருந்தது. அது ஏன் என்று நான் ஆச்சரியப்படுகிறேன். அங்கே சென்று, கிணற்றின் அருகே அமர்ந்தார், அந்த ஸ்திரீ தண்ணீர் மொள்ள வந்தாள். அவர், "எனக்குக் குடிக்கத் தா," என்று கேட்டார். அவள், "ஏன், யூதர்கள் சமாரியர்களிடம் அப்படிப் கேட்பது வழக்கமில்லையே," என்றாள். "ஆனால் உன்னிடம் பேசுபவர் யார் என்று உனக்குத் தெரிந்திருந்தால், நீ என்னிடம் குடிக்கக் கேட்டிருப்பாய், நீ இங்கே மொள்ள வராத தண்ணீரை நான் உனக்குக் கொடுத்திருப்பேன்," என்று சொன்னார். "ஏன்," அவள், "கிணறு ஆழமானதே," மற்றும் அதுபோன்ற காரியங்களைச் சொன்னாள். அவர், "போய், உன் புருஷனை அழைத்துவா," என்று நேராக விஷயத்திற்கு வந்தார். "போய், உன் புருஷனை அழைத்துவா. அதுதான் உனது பிரச்சனையாக இருக்கிறது." அவள், "எனக்குப் புருஷன் இல்லை," என்று சொன்னாள். அவர், "அது சரிதான். உனக்கு ஐந்து புருஷர்கள் இருந்தார்கள்," என்று கூறினார். "ஏன்," அவள், "ஐயா, நீர் ஒரு தீர்க்கதரிசி என்று காண்கிறேன்," என்றாள். அவள், "மேசியா வரும்போது அவர் இந்தக் காரியங்களைச் செய்ய முடியும் என்று எனக்குத் தெரியும், ஆனால் நீர் யார்?" என்று கேட்டாள். அவர், "உன்னுடனே பேசுகிற நானே அவர்," என்றார். ஆமென். 80 அதுதான் கிறிஸ்தவத்தின் அடையாளம். அதுதான் அவர்கள் கொண்டிருந்த விசுவாசம். அங்கேதான் அந்த முன்மாதிரி இருக்கிறது. 81 ஏன், அவள் நகரத்திற்குள் ஓடினாள். இயேசு உள்ளே வந்தார், அவர் எந்த அற்புதங்களையும் செய்யவில்லை அல்லது தமது அடையாளங்கள் எதையும் செய்யவில்லை. அவர் மக்களிடம் பேச மட்டுமே செய்தார். அவர்கள் சொன்னார்கள், "நாங்கள் உங்களை விசுவாசிக்கிறோம். நாங்கள் உங்களை விசுவாசிக்கிறோம். உங்கள் வாழ்க்கையின் இரகசியத்தை நீங்கள் அறிந்திருந்தீர்கள் என்று அந்தப் பெண் சொன்னதால் அல்ல, ஆனால்-ஆனால் நீங்கள் பேசுவதை நாங்கள் கேட்டதாலேயே, நாங்கள் உங்களை விசுவாசிக்கிறோம். அதுதான் காரணம்..." சற்று நேரத்திற்குப் பிறகு அந்த நகரத்திற்கு என்ன நடந்தது என்பதைக் கவனியுங்கள். 82 இயேசு தொடர்ந்து சென்றார். கவனியுங்கள், அவர் அப்படிப்பட்ட ஒரு வாழ்க் கையைத்தான் வாழ்ந்தார். அவர் பெதஸ்தா குளத்தின் வழியாக, அல்லது குளத்தின் அருகே கடந்து சென்றார், அங்கே முடமானவர்கள், நடக்க முடியாதவர்கள், குருடர்கள், சூம்பிய உறுப்புடையவர்கள் என திறனற்ற மக்கள் பெருந்திரளாகப் படுத்திருந்தார்கள். 83 இப்போது, பாருங்கள். இயேசுவுக்கு மனதுருக்கம் இருந்தது என்று நீங்கள் நம்புகிறீர்களா? அவர் அன்பு நிறைந்தவராக இருந்தார். ஆனால், சில சமயங்களில் மக்கள் அன்பில், தாங்கள் எந்த வகையான அன்பைப் பற்றிப் பேசுகிறோம் என்பதை மறந்துவிடுவது போல இது இருக்கிறது. பிலியோ (Phileo) அன்பு மற்றும் அகபாஓ (Agapao) அன்பு: ஒன்று... இரண்டுமே அன்புதான், ஆனால் ஒன்று பரலோகத்திலிருந்து வரும் அன்பு, மற்றொன்று இங்கே பூமியில் உள்ள அன்பு. 84 இன்று நான் ஒரு நிருபரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, "இங்கே கீழே உள்ள அன்பு-அதாவது மனித அன்பு, உங்கள் மனைவியின் காரணமாக ஒரு மனிதனை சுட்டுக்கொல்லச் செய்யும், ஆனால் மேலிருந்து வரும் அன்பு அவனுடைய இழந்துபோன ஆத்துமாவுக்காக உங்களை ஜெபிக்கச் செய்யும்" என்று சொன்னேன். முற்றிலும் வித்தியாச மானது; பார்த்தீர்களா? அவற்றுள் ஒன்று இங்கே இந்த மட்டத்தில் உள்ள அன்பு, அதாவது மனித அன்பு, மற்றொன்று மேலிருந்து வரும் அன்பு. 85 கூட்டத்தைப் பார்த்து, "ஓ, இந்த நபரைக் குணப்படுத்த மாட்டீர்களா, அவர் வியாதியாயி ருக்கிறார். அவர் மிகுந்த தேவையில் இருக்கிறார். இவர் ஒரு நல்ல மனிதர்; எங்களுக்கு இவரைத் தெரியும். இந்தப் பிஞ்சுக் குழந்தையைக் குணப்படுத்துங்கள். பாருங்கள்," என்று சொல்லும் மனதுருக்கங்கள் மனித மனதுருக்கமாகும். ஆனால் உண்மையான... இதோ: உண்மையான தெய்வீக மனதுருக்கம் என்பது, அதைச் செய்வதற்கு உங்களை அனுப்பினவருடைய சித்தத்தைச் செய்வதாகும். 86 வியாதிப்பட்டவர்கள், பாதிக்கப்பட்ட வர்கள், மற்றும் ஊனமுற்றவர்கள் அனைவ ரையும் கடந்து சென்ற இயேசு, அங்கே போய், ஒரு படுக்கையின் மேல் படுத்திருந்த ஒரு மனிதனைக் கண்டு, "நீ சொஸ்தமாக விரும்புகிறாயா?" என்று கேட்டார். "சரி," அவன் சொன்னான், "என்னால் நடக்க முடியும். நான் குளத்தருகே இறங்கி வரும்போது, ஏனோ, என்னைவிட சற்று நலமாக இருக்கும் யாராவது எனக்கு முன்பாக இறங்கிவிடுகிறார்கள்." 87 இயேசு சொன்னார்... இப்போது பாருங்கள், அவன் அங்கே படுத்திருப்பதையும், முப்பத்தெட்டு வருடங்களாக வியாதியாய் இருப்பதையும், முப்பத்தெட்டு வருடங்களாக அவனுக்கு இந்த வியாதி இருப்பதையும் இயேசு அறிந்திருந்தார். அப்படிப்பட்ட ஒருவரை அவர் ஏன் குணப்படுத்த வேண்டும்? அவர் பிதாவின் சித்தத்தைச் செய்து கொண்டிருந்தார். மேலும் அவர் அவனைக் கண்டு, "உன் படுக்கையை எடுத்துக்கொண்டு உன் வீட்டிற்குப் போ" என்றார். அவன் தன் படுக்கையைச் சுருட்டிக்கொண்டு, இயேசு தன்னிடம் சொன்னபடியே செய்து, நடந்து சென்றான். 88 யூதர்கள் அவனைக் கண்டு, அவனைக் கேள்வி கேட்கத் தொடங்கினார்கள்; அவர்கள் அவனை ஒரு விசாரணைக்குக் கொண்டு வந்தார்கள். இயேசு விசாரணைக்குக் கொண்டுவரப்பட்டார். 89 மேலும் 19-வது, அதாவது பரிசுத்த யோவான் 5-ம் அதிகாரம் 19-ம் வசனம், இயேசு விசாரிக்கப்பட்டபோது... அவர்கள் இயேசுவை எதைக் குறித்துக் கேள்வி கேட்பார்கள் என்று நான் ஆச்சரியப்படுகிறேன். முதல் காரியம், ஓய்வுநாளில் குணமாக்கியது. அடுத்த காரியம்: "கீழே இருக்கிற அவர்களை நீங்கள் ஏன் குணமாக்கவில்லை? உங்களால் முடியுமானால், அங்கே போய் அவர்கள் எல்லாரையும் குணமாக்குங்களேன்?" 90 இயேசு அளித்த பதிலைச் செவிகொடுத்துக் கேளுங்கள்: அவர் சொன்னார், "மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், பிதா எனக்குக் காண்பிக்கிறவை களையல்லாமல் குமாரன் தாமாய் ஒன்றையும் செய்யமாட்டார். பிதா செய்வதை நான் காண்கிறேன், பிதா எனக்குக் காண்பிக்கிறார், பிறகு நான் போய் அதைச் செய்கிறேன்." 91 வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பிதா எதைச் செய்யச் சொன்னார் என்பதன் தரிசனத்தைக் காணும்வரை இயேசு தாமாய் எதையும் செய்யவில்லை. அதன்பிறகு அவர் போய் அதைச் செய்தார். அதுதான் கிறிஸ்தவம்: தேவனுடைய சித்தத்தைச் செய்வது. அதுவே அவருடைய வாழ்க்கையாக இருந்தது. அதைத்தான் இயேசு செய்தார். 92 இப்போது, அவர் புறப்பட்டுச் சென்றபோது என்ன சொன்னார்? ஒருமுறை ஒப்புவிக்கப்பட்ட விசுவாசத்திற்காக நாம் போராடுகிறோம். அது பரிசுத்தவான்களுக்கு ஒப்புவிக்கப்பட்டிருந்தால் அது எங்கிருந்தோ வந்திருக்க வேண்டும். அது சரிதானே? பரிசுத்தவான்களுக்கு ஒருமுறை ஒப்புவிக்கப் பட்ட விசுவாசம்: அதை ஒப்புவித்தது யார்? 93 அவர் சொன்னார், "இன்னும் கொஞ்சக் காலத்திலே உலகம் என்னைக் காணாது. ஆயினும், நீங்கள் என்னைக் காண்பீர்கள், ஏனெனில் உலகத்தின் முடிவு பரியந்தமும் நான் உங்களுடனே கூட, உங்களுக்குள்ளேயே இருப் பேன்; மேலும் நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், நான் செய்யும் காரியங்களை நீங்களும் செய்வீர்கள், இதைவிட மேன்மை யானவைகளையும் செய்வீர்கள்." உங்களுக்குப் புரிகிறதா? அது என்னவாக இருந்தது? 94 அவர் வெளிப்படுத்திய விசுவாசத்தை, அதை உலகத்தின் கடையாந்தரம் வரைக்கும் கொண்டு செல்வதற்காக அவர் சபைக்கு ஒப்பு வித்தார். ஆமென். ஓ, இது உண்மையிலேயே உங்கள் ஆழத்தில் ஊடுருவிச் செல்ல வேண்டும் என்று நான் நம்புகிறேன், உங்கள் இடது பக்கத்தில் உள்ள ஐந்தாவது விலா எலும்பைப் பாருங்கள். 95 கவனியுங்கள், அதுதான்-யூதா பேசிக் கொண்டிருந்த விசுவாசம். அப்படிப்பட்ட ஒரு விசுவாசத்தை, இயேசு செய்த காரியங்களை, தேவன்மேல் அவர் வைத்திருந்த விசுவாசத்தை, அதையே அவர் பரிசுத்தவான்களுக்கு ஒப்பு வித்தார். ஏனெனில் அவர், "நான் செய்கிற அதே காரியங்களை, நீங்களும் செய்கிறீர்கள்" என்று சொன்னார். அல்லேலூயா! எல்லாம் சரியாக இருக்கும் என்று நம்புகிறேன். 96 கவனியுங்கள், "நான் செய்கிற காரியங்களை, நீங்களும் செய்வீர்கள். நான் இதை உங்களுக்கு ஒப்புவிக்கிறேன். ஆனால் நீங்கள் அதைப் பெற்றுக்கொள்வதற்கு முன்பு, எருசலேம் நகரத்திற்குச் சென்று அங்கே கொஞ்சக் காலம் காத்திருங்கள். பிதாவின் வாக்குத்தத்தத்தை நான் உங்கள்மேல் அனுப்பப் போகிறேன். நான் வெகு விரைவில் உங்களைக் காணத் திரும்பி வருவேன். நான் கல்வாரிக்குச் செல்லுகிறேன். அவர்கள் என்னைச் சிலுவையில் அறையப்போகிறார்கள், புறஜாதி யாரின் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிறேன். துன்மார் க்கர்கள் என்னைச் சிலுவையில் அறைவார்கள், ஆனால் மூன்றாம் நாளில் நான் உயிர்த் தெழுவேன். பிறகு நான் மீண்டும் திரும்பி வருவேன். ஆகையால் நீங்கள் எருசலேம் நகரத்தில் தங்கியிருங்கள்." லூக்கா 24:49, "நீங்கள் இந்தச் சுவிசேஷத்துடன் உலகமெங்கும் செல்வதற்கு முன்பாக, எருசலேம் நகரத்தில் தங்கியிருங்கள், அல்லது காத்திருங்கள். நீங்கள் எருசலேம் நகரத்திற்குச் சென்று, நான் வரும்வரை அங்கே காத்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்." ஊம்-ஹூம். 97 அவரே உங்களுக்குள் இருக்கப்போகிறவர் என்றால், ஆவியின் ரூபத்தில் வந்தவர் அவர்தான். "சென்று காத்திருங்கள், ஏனெனில் பிதா உங்களுக்கு வாக்குத்தத்தம் செய்த அந்த வாக்குத்தத்தத்தை நான் அனுப்பப்போகிறேன். நான் அதை உங்கள்மேல் அனுப்புவேன். அப்போது நான் உலகத்தின் முடிவு பரியந்தமும் உங்களுடனேகூட, உங்களுக் குள்ளேயே இருப்பேன். நான் இந்த சரீரத்தில் இங்கே இருந்தபோது செய்த அதே காரியங் களைச் செய்துகொண்டு, உங்களுக்குள் நான் இருப்பேன். நான் என் மர்மமான சரீரத்தில் அதே காரியத்தைச் செய்வதற்காகத் திரும்பி வருவேன்." காண்கிறீர்களா? 98 கல்வாரியில் அவருடைய மரணத்தின் ஒரே நோக்கம், பாவியைக் இரட்சிப்பதற்கும், அவர் செய்த அதே காரியங்களைச் செய்வ தற்கான வல்லமையை அல்லது அதிகாரத்தை, மற்றும் விசுவாசத்தை சபைக்கு உண்டாக் குவதற்கும், அல்லது அவர் தாமே வாசம் செய்வதற்கு ஒரு வழியை ஏற்படுத்த ஒரு இருதயத்தைத் திறப்பதற்குமே ஆகும். நீங்கள் இதைக் காண்கிறீர்கள் என்று நம்புகிறேன். 99 கவனியுங்கள். அது அப்படி நடந்ததா என்று பார்ப்போம். சரி, அவர் புறப்பட்டுப் போனபின்பு, பெந்தெகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் வந்தபோது (கவனியுங்கள்!), உடனடியாக பிலிப்பு என்ற பெயருடைய ஒரு சிறிய மனிதன், கிறிஸ்துவினால் முழுமையாக நிரப்பப்பட்டு, இயேசு எந்த அற்புதங்களையும் செய்யாத, ஆனால் ஒரு பெண்ணிடம் அவளுக்கு என்ன பிரச்சனை என்பதைத் தெய்வீக வெளிப்பாட்டின் மூலம் கூறிய சமாரியாவுக்குக் கீழே சென்றான்; அங்கே சென்று பிரசங்கித்து, அற்புதங் களைச் செய்து, பிசாசுகளைத் துரத்தினான், அந்த நகரத்தில் அவர்களுக்கு மிகுந்த சந்தோஷம் உண்டாயிற்று. அதுதான் பரிசுத்தவான்களுக்கு ஒருமுறை ஒப்புவிக்கப் பட்ட விசுவாசம். 100 பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட பின்பு, ஒருநாள் பேதுரு ஒரு பயணத்தை மேற்கொண்டு, மதிய உணவிற்காகக் காத்திருக்க வீட்டின் மேல் தளத்திற்குச் சென்றான். அவன் ஒருவேளை காலை உணவு எதையும் சாப்பிட்டிருக்க மாட்டான், ஏனென்றால் அவன் பசியாயிருந்தான். இங்கே கீழே கடலோரத்தில், தோல் பதனிடும் சீமோனின் வீட்டில் அவர்கள் ஆயத்தம் செய்துகொண்டிருந்தபோது, கீழ்த்திசை நாடுகளில் வீட்டின் மேல் தளத்தில் தூங்குவது, வீட்டின் மேல் தளத்தில் சாப்பிடுவது மற்றும் எல்லாவற்றுக்கும் வழக்கமாக இருந்தபடி, சீமோன் பேதுரு வீட்டின் மேல் தளத்திற்குச் சென்று உட்கார்ந்து, சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான். அவன் ஓய்வெ டுத்துக் கொண்டிருந்தபோது, அவன் விசுவா சத்தின் ஒரு பிரதிநிதியாக இருந்தான். நாம் இப்போது விரைவாகச் செல்ல வேண்டும். ஏற்கனவே மணி ஒன்பதாகிவிட்டது. முடிவாக, செவிகொடுங்கள். 101 அவன் விசுவாசத்தை வெளிப்படுத்த வேண்டியிருந்தது. ஏனெனில் அவன்தான் அதை வெளிப்படுத்துவான் என்று இயேசு அவனிடம் சொல்லியிருந்தார். எனவே அவன் மெய்மறந்த நிலைக்குச் (trance) சென்றபோது... அவன் எத்தகைய நிலைக்குச் சென்றான் என்று ஆச்சரியப்படுகிறேன். அவன் மெய்மறந்த நிலையில் இருந்தான் என்று வேதாகமம் சொல்கிறது. இன்று அவர்கள் "அங்கே ஒரு ஆவியுலகத் தொடர்பாளர் இருக்கிறார்" என்று சொல்வார்கள். ஊம்-ஹூம், ஊம்-ஹூம். 102 அவன் மெய்மறந்த நிலைக்குச் சென்றான், அந்த மெய்மறந்த நிலையில் அவன் ஒரு தரிசனத்தைக் கண்டான். அந்தத் தரிசனம் அவனுக்கு என்ன சொல்லிக்கொண்டிருந்தது? துல்லியமாக தேவனுடைய சித்தத்தை. நசரேயனாகிய இயேசுவுக்கு நடந்த அதே காரியம். 103 அவர் சொன்னார், "இப்போது பார் பேதுரு, நீ எழுந்து போக வேண்டும் என்று நான் விரும்புகிறேன். சில மனிதர்கள் வருகிறார்கள், இப்போது உனக்காகக் காத்திருக்கிறார்கள், அசுத்தமானவைகள் நிறைந்த இந்தக் கூரையின் (துப்பட்டியின்) தரிசனத்தை நான் உனக்குக் காண்பித்தேன்." 104 பேதுரு எழுந்திருந்து, "ஓ, இல்லை. ஹூம்-ஹூம். நான் ஒருபோதும் தவறான எதையும் சாப்பிட மாட்டேன்" என்றான். "நான்-நான்... ஒருபோதும் ஒரு அசுத்தமான பொருள்கூட என் உடலுக்குள் சென்றதில்லை" என்றான். "நான் அதைச் சாப்பிட மாட்டேன்" என்றான். 105 அவர், "நான் சுத்தமாக்கினதைத் தீட்டும் அசுத்தமுமென்று நீ சொல்லாதே" என்றார். "இப்போது, பேதுரு, உனக்குத் தரிசனம் புரியவில்லை, ஆனால் உனக்காக இரண்டு மனிதர்கள் காத்திருக்கிறார்கள். எழுந்து, ஒன்றுஞ் சந்தேகப்படாமல் அவர்களுடனேகூடப் போ" என்றார். ஓ, ஆச்சரியம். பரிசுத்தவான்களுக்கு ஒருமுறை ஒப்புவிக்கப்பட்ட விசுவாசம் அங்கே இருக்கிறது. அவர்கள் அதோடு அப்படித்தான் செயல்பட்டார்கள். 106 எனவே பேதுரு எழுந்தான், ஒருவேளை, தன் மதிய உணவைக் கூட சாப்பிட்டிருக்க மாட்டான், அவன் புறப்பட்டுச் சென்றான். கொர்நேலியு ஒரு தரிசனத்தைக் கண்டிருந்தான், அவனுடைய மக்கள் எல்லாரையும், அதாவது தெரிந்து கொள்ளப்பட்டவர்களை அழைத்து, அவர்களை உள்ளே கொண்டு வந்து, உட்கார வைத்து, அநேகமாக சலவை பெஞ்ச் எல்லாவற்றையும் எடுத்து, நாற்காலிகளை இழுத்துப் போட்டு, மக்கள் அனைவரையும் சுற்றிலும் உட்காரவைத்திருந்தான். பேதுரு உள்ளே வந்து சாட்சிகூறத் தொடங்கி, பெந்தெகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் அவர்கள்மேல் எப்படி இறங்கினார் என்பதை அவர்களுக்குச் சொல்லத் தொடங்கினான். 107 பேதுரு இந்த வார்த்தைகளைப் பேசிக் கொண்டிருக்கும் போதே, பரிசுத்த ஆவியானவர் புறஜாதிகள் மேல் இறங்கினார். அதுதான் பரிசுத்தவான்களுக்கு ஒருமுறை ஒப்புவிக்கப் பட்ட விசுவாசம். அவர்கள் அனைவரும் பெந்தெகொஸ்தே நாளில் செய்தது போன்ற அதே வகையான ஒரு கூட்டத்தைக் கொண்டிருந்து, அந்நிய பாஷைகளைப் பேசவும், தேவனைப் பெருமைப்படுத்தவும், தேவனை மகிமைப்படுத்தவும் தொடங்கினார்கள். பேதுரு, "ஆரம்பத்தில் நாம் பரிசுத்த ஆவியைப் பெற்றதுபோல இவர்களும் பெற்றிருக்கிறார்கள் என்பதைக் காணும்போது, இவர்கள் ஞானஸ்நானம் பெறுவதற்கேதுவாகத் தண்ணீரை நாம் விலக்கலாமா?" என்றான். எனவே அவன் அவர்களைக் கர்த்தருடைய நாமத்தினாலே ஞானஸ்நானம் பெறும்படி கட்டளையிட்டான். பின்பு அவன் சில நாட்கள் அவர்களுடன் தங்கியிருந்தான். 108 இந்தக் காலக்கட்டத்தில் மிகவும் வித்தியாசமான ஒரு மனிதர் இருந்தார், பவுல், அவர் இளங்கலை பட்டமும், D.D. மற்றும் Ph.D. பட்டமும் பெற்றிருந்து அனைத்து இறையியலைப் பற்றியும் அறிந்திருந்தார். அவர் சொன்னார், "நான் அந்தப் கூட்டத்தினரையும், பைத்தியக்கார மக்களையும் பிடிப்பேன்..." அவர் அப்படித்தான் சொன்னார்: "மார்க்க பேதம்." மார்க்கபேதம் உள்ள நபர், அதாவது ஒரு பதிதன் (heretic) என்றால் என்ன? "அறிவிலி, பைத்தியம்." அவர் சொன்னார், "நான் அவர்கள் ஒவ்வொருவரையும் கைது செய்வேன். தாங்கள் எதைப் பற்றிப் பேசுகிறார்கள் என்று அவர்களுக்கே தெரிய வில்லை." 109 பவுல் தன்னுடைய Ph.D.-யுடன் இங்கே இயற்கையான தளத்தில் இருந்தார். காண்கிறீர்களா? அவருக்குத் தெரியவில்லை. அவர் ஒரு அறிவுப்பூர்வமான விசுவாசத்தைக் கொண்டிருந்தார், ஆனால் அவர் தெய்வீக விசுவாசத்தைக் கொண்டிருக்கவில்லை. நான் ஒரு தெய்வீக விசுவாசத்தைக் கொண்டி ருப்பதைவிட ஒரு அறிவுப்பூர்வமான விசுவா சத்தைக் கொண்டிருப்பதில் நிறைய வித்தியாசம் இருக்கிறது. அங்குதான் என் பாப்டிஸ்ட் நண்பர்களே, நீங்கள் முன்னேறிச் செல்லத் தவறிவிட்டீர்கள். நீங்கள் அதனாலேயே அறிவுப் பூர்வமான விசுவாசத்தைப் பெறுகிறீர்கள், ஆனால் இருதயத்திலிருந்து பாவத்தை அகற்றுவது உங்களுக்குக் கிடைக்கும் இயேசு கிறிஸ்துவின் தெய்வீக வெளிப்பாடாகவே இருக்க வேண்டும். அறிவுப்பூர்வமான விசுவாசம் போதாது. அது சரிதான், ஆனால் அது உங்களைப் பரிசுத்த ஆவியானவரிடம் மட்டுமே கொண்டுவருகிறது. பரிசுத்த ஆவியானவர் என்பது பிறப்பின் தனிப்பட்ட அனுபவம், புதிய பிறப்பு, மறுபிறப்பு, கிறிஸ்துவுக்குள் ஒரு புதிய சிருஷ்டியாக மாறுவதாகும். 110 கவனியுங்கள், பவுல் தன் குதிரையின் மீது குதித்து ஏறி, பிரதான ஆசாரியனிடமிருந்து சில நிருபங்களைப் பெற்றுக்கொண்டு தமஸ்கு விற்குப் புறப்பட்டு, "அந்த மார்க்க பேதமுள் ளவர்கள் ஒவ்வொருவரையும் நான் கைது செய்வேன். நான் அவர்களைத் திரும்பக் கொண்டுவருவேன்" என்று சொன்னார். 111 சுவிசேஷம் எப்படிப் பரவியது என்று பாருங்கள். இன்று இருப்பதைப்போல அது சும்மா இருக்கவில்லை. சகோதரனே, அந்த அப்போஸ்தலர்களால் தேவனுடைய கிரியைகள் செய்யப்படுவதை அவர்கள் கண்டபோது, அவர்கள் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் உண்மையிலேயே அக்கினியாக இருந்தார்கள். அவர்கள் ஏதோ ஒன்றைச் செய்து கொண்டிருந்தார்கள். அநேகமாக பிலிப்புவின் எழுப்புதல் ஒரு பெரிய காரியத்தை உருவாக்கியிருக்கலாம். 112 மேலும் சமாரியாவிலிருந்து தமஸ்குவை நோக்கிப் போகும் வழியில் பவுல் சென்று கொண்டிருந்தபோது; தேவன் ஒரு மனிதனை அழைத்திருந்தார், அவனைப் பரிசுத்த ஆவியினால் நிரப்பி, அவனுக்குப் பகுத்தறியும் வரத்தைக் கொடுத்திருந்தார். அவனுடைய பெயர் அனனியா. 113 எனவே பவுல் தன் பாதையில் கீழே செல்லும்போது... அதுதான் பரிசுத்தவான்களுக்கு ஒருமுறை ஒப்புவிக்கப்பட்ட விசுவாசம். பவுல் தன் பாதையில் கீழே செல்லும்போது, தன்னுடைய பெரிய பழைய குதிரையில் சவாரி செய்துகொண்டு, வெறும் மிரட்டலாக, பெரிய பழைய காரியங்களைக் கத்திக்கொண்டு சென்றார்: "ஆ, நான் அங்கே செல்லும்வரை காத்திருங்கள்," பெரிய அச்சுறுத்தல்கள், "நான்-நான் அவர்களைப் பார்த்துக்கொள்கிறேன். அங்கே நடக்கும் அந்த சத்தம், அந்தத் தரிசனங்கள், மற்றும் அந்தத் தீர்க்கதரிசனங்கள் எல்லாவற்றையும் நான் நிறுத்துவேன். நான் அதற்கு ஒரு-நான் அதற்கு ஒரு முடிவுகட்டுவேன்." 114 அந்தச் சமயத்தில், இஸ்ரவேல் புத்திரரை வழிநடத்திய அக்கினி ஸ்தம்பம், அவருக்கு முன்பாக ஒருபோதும் தோன்றியிருக் கவில்லை, ஆனால் அது அவருடைய முகத்தில் நேராக அடித்து அவரைக் குதிரையிலிருந்து கீழே தள்ளியது. ஆமென். கீழே புரளத் தொடங்கி, அவர் நிமிர்ந்து பார்த்தார், அவரைச் சுற்றிலும் அது அவ்வளவு பிரகாசமாக இருந்தது; அதே அக்கினி ஸ்தம்பம், சூரியன் அதன் நடுபகலின் வெப்பத்தில் பிரகாசிப்பதைவிட வலிமையாகப் பிரகாசித்த ஒரு வெளிச்சம். பவுல் தன் தலையை அசைத்தார். அவர், "சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்?" என்றார். அவர், "ஆண்டவரே, நான் யாரைத் துன்பப்படுத்துகிறேன்?" என்றார். எவ்வளவு பெரிய வித்தியாசம். 115 தேவன், "இப்போது, நான் அவனுக்கு என்ன செய்யப்போகிறேன் என்று பார்க்கி றீர்களா? நான் அவனை ஒரு-நான் அவனை ஒரு பாத்திரமாக மாற்றப்போகிறேன்; அவன் எனக்கு ஊழியம் செய்யும்படி நான் செய்வேன்" என்றார். உங்களுக்குத் தெரியும், காரியங்களைச் செய்ய தேவனுக்கு ஒரு வழியிருக்கிறது. 116 எனவே அவர், "இப்போது எழுந்து, உன் காலூன்றி நின்று, நேர்த்தெரு என்னப்பட்ட தெருவுக்குப் போ" என்றார். புதிதாக மனந் திரும்பிய ஒருவரைக் கொண்டுசெல்ல அது ஒரு நல்ல இடம். மேலும், "தமஸ்குவிற்குப் போ, நேர்த்தெரு என்னப்பட்ட ஒரு தெருவிற்கு" என்றார். 117 இப்போது, பவுல் அங்கே எங்கேயோ சென்று, "அம்மா, ஓ, என் தலை வலிக்கிறது. என் கண்கள், என்னால் பார்க்கவே முடியவில்லை, ஒரு சிறிய வெளிச்சம், நான் மிகவும் மோசமான ஒரு நிலையில் இருக்கிறேன்" என்று சொல்வதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. அங்கே ஹோட்டலில் ஒரு சிறிய அறையை வாடகைக்கு எடுத்து, உள்ளே சென்றார். நாள் முழுவதும், அவர், "கர்த்தராகிய இயேசுவே, அனனியா எனக்குக் கொடுத்த இந்தப் பழைய கடிதங்களை நான் கிழித்தெறிந்துவிடுகிறேன். நான்-நான் அவர்களைப் பற்றி இனி அதிகமாகத் தெரிந்துகொள்ள விரும்பவில்லை. ஆண்டவரே, உங்களைப்பற்றி நான் அதிகமாகத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்" என்று சொல்லிக் ஜெபித்தார். 118 அங்கே அனனியா என்ற பெயருடைய, தரிசனங்களைக் கண்ட ஒரு முதிய பிரசங்கியார் இருந்தார். காண்கிறீர்களா? பரிசுத்தவான்களுக்கு ஒருமுறை ஒப்புவிக்கப்பட்ட விசுவாசம், அவருக்கு எப்படி கிடைத்தது? காண்கிறீர்களா? சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட்டிருந்தது. 119 அனனியா ஒரு தரிசனத்தைக் கண்டார், சவுல் என்னும் பெயருடைய ஒரு மனிதன் ஒரு வீட்டில் படுத்திருப்பதையும், உருண்டு புரண்டு, அழுதுகொண்டு, அவஸ்தைப்படுவதையும் அவர் கண்டார். கர்த்தர், "அனனியா, அங்கே நேர்த்தெரு என்னப்பட்ட தெருவிற்குப் போய், அவன் மீண்டும் தன் பார்வையைப் பெற்று, குணமடைந்து, பரிசுத்த ஆவியைப் பெறும் படியாக, அவன்மேல் உன் கைகளை வை" என்றார். 120 அது என்ன? தேவன் அனனியாவுக்கு ஒரு தரிசனத்தில் தோன்றினார். இயேசு கொண்டுவந்த விசுவாசம், அதோடு வரும் அந்த-அந்த விளைவுகள், சபையில் உருவாக்கப்பட்டன. "இப்போது கீழே போ, அவன்மேல் உன் கைகளை வை, அவன் பரிசுத்த ஆவியைப் பெற்றுத் தன் பார்வையைப் பெறுவான்" என்றார். 121 தேவன் இப்போதும் மக்களுக்கு வெளிப்படுத்துகிறார், "போய், இவன்மேல் உன் கைகளை வை, இவனிடம் சொல், இவனிடம் பேசு, இங்கே இவனிடம் போ." நீங்கள் இதை ஒவ்வொரு இரவும் பார்க்கிறீர்கள். ஆமென். அவர் சொன்னார், "கீழே போய் அவன்மேல் உன் கைகளை வை." அவர் சொன்னார், "ஆண்டவரே, இந்த மனிதனைப் பற்றி நான் கேள்விப் பட்டிருக்கிறேன்." அவர் சொன்னார், "அவன் இழுத்துச் செல்கிறான், அச்சுறுத்துகிறான், பிரதான ஆசாரியனிடமிருந்து அவனுக்கு நிருபங்கள் கிடைத்திருப்பதாக நாங்கள் கேள்விப்படுகிறோம்." தேவன் சொன்னார், "இதோ, அவன் ஜெபம் பண்ணுகிறான்." 122 அவர் தரிசனத்திலிருந்து வெளியே வந்தபோது, அவர் தன் கண்களைத் துடைத்துக்கொண்டு, மீண்டும் தன்னை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதை என்னால் பார்க்க முடிகிறது; அவர் சென்று தனது வேதத்தை, அதாவது அவருடைய சுருளை எடுத்து, அதைத் தன் கையின் (அக்குளின்) கீழ் வைத்துக் கொண்டு, இதோ அவர் தெருவில் நடந்து செல்கிறார். 123 நேர் எனப் பெயர்கொண்ட தெருவைப் பார்த்து, அவர் சொன்னார், "இப்போது பார்ப்போம். அந்த தரிசனத்தில் ஒரு குறிப்பிட்ட தோற்றமுடைய ஒரு வீட்டைக் கண்டேன். அவன் எங்கே இருக்கிறான்?" அவர் நகரப் பூங்காவைக் கடந்து, நீதிமன்றத்தைக் கடந்து, ஜெப ஆலயத்தைக் கடந்து, தொடர்ந்து நடந்து செல்கிறார். இங்கே வந்து, அவர் சொன்னார், "ஓ, அதுதான். நான் தரிசனத்தில் கண்ட இடம் அதுதான்." அங்கே சென்று கதவைத் தட்டுகிறார், கதவு திறக்கப்படுகிறது, உள்ளே செல்கிறார்; அங்கே முதிர்ந்த சவுல் உருண்டு, புரண்டு, ஜெபித்துக்கொண்டிருக்கிறார். 124 அவர் அவரிடம் சென்று, "சகோதரன் சவுலே..." என்றார். ஆமென்! "சகோதரன் சவுலே, நீ கீழே வரும்போது ஒரு தரிசனத்தைக் கண்டாய் அல்லவா? கர்த்தராகிய இயேசு அங்கே உனக்குத் தரிசனமானார்." சவுல், "அது உமக்கு எப்படித் தெரியும்?" என்று கேட்பதை நான் கேட்கிறேன். "ஏனென்றால், அவர் இங்கே எனக்குத் தரிசனமாகி, எல்லாவற்றையும் என்னிடம் சொன்னார்." 125 அதுதான் பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புவிக்கப்பட்ட விசுவாசம். அவர் சொன்னார், "அவர் அங்கே என்னை சந்தித்து, நீ குணமடையும்படியாகவும், பரிசுத்த ஆவியான வரைப் பெற்றுக்கொள்ளும்படியாகவும் இங்கே வந்து உன்மேல் கைகளை வைக்கும்படி என்னிடம் சொன்னார்; ஏனென்றால் அவர் உன்னைத் தெரிந்துகொண்டார்." ஓ, ஆச்சரியம். இதோ நீங்கள் இருக்கிறீர்கள். 126 தேவன் அவரிடம் கேட்டபடி அவர் தன் கைகளை அவன்மீது வைத்து ஜெபித்தார். பவுலின் கண்கள் குணமடைந்தன. அவர் அவனை நேராக நதிக்குக் கூட்டிச்சென்று, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, அவனுடைய பாவங்களைக் கழுவி, அவனுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார். பவுல் சுவிசேஷத்திற்காக அழைக்கப்பட்டார். அதுதான் பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புவிக்கப் பட்ட விசுவாசம். 127 பவுல் ஒரு நாள் இரவு அங்கே நின்றுகொண்டிருக்கிறார், ஒரு கைதியாக... பழைய ரோமப் பேரரசின் சிறைக் கப்பல்களுக்குச் சென்று கொண்டிருக்கிறார். அவர்கள் அவருடைய தலையை வெட்டி, ஜன்னல் வழியாக ஒரு பள்ளத்தில் வீசிய அந்த இடத்தில் நான் நின்றிருக்கிறேன். உங்கள் இதயம் எரியும்! அங்கே சிறையிலிருந்த பவுல், வெளியேற்றப்பட்டு, கோதுமை ஏற்றப்பட்ட ஒரு பழைய கப்பலில் ஏற்றப்பட்டுச் சென்று கொண்டிருந்தார். அங்கே தனது பயணத்தில், அவர் மக்களிடம், "நாம் இங்கிருந்து, கிரேத்தாவிலிருந்து புறப்பட்டு அங்கே செல்லக்கூடாது என்று நான் உணருகிறேன்" என்று சொன்னார். அவர், "நீங்கள் ஏதோ ஆபத்தை ஏற்படுத்தப் போகிறீர்கள் என்று நான் பயப்படுகிறேன்" என்றார். 128 "ஆம், எப்படிப் பார்த்தாலும் இந்த கைதி யார்? இவனைக் கப்பலில் உதைத்துத் தள்ளுங்கள்." பதினான்கு பகலும் இரவும் வீசிய கொடிய புயலில், எப்படியாவது தப்பித்து விடலாம் என்ற எல்லா நம்பிக்கைகளும் அற்றுப்போயின. அவர்கள் அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்பட்டார்கள், திசைகாட்டி ஊசி உடைந்தது. பாய்மரம் விழுந்தது, எல்லாமே, அது என்ன-என்ன ஒரு நிலைமை; பழைய பாய்மரத் துணிகள் நூல்களாகக் கிழிந்தன, ஒவ்வொரு மனிதனும் அலறிக் கொண்டும் அழுதுகொண்டும் இருந்தான்; அவர்கள் இரட்சிக்கப்படுவார்கள் என்ற எல்லா நம்பிக்கைகளும் அற்றுப்போயின. இதோ பவுல் தன் கைகளிலும் கால்களிலும் சங்கிலிகளோடு இருந்தார். 129 ஒரு நாள் இரவு அவர் கப்பலின் அடித்தளத்திற்குச் சென்றார், ஒருவேளை, கப்பலின் தடுப்புச் சுவர்ப் பகுதிக்குச் சென்று, ஒரு சிறிய இடத்திற்குள் தவழ்ந்து சென்று, கதவை மூடினார், ஒரு இரகசிய அறை, அங்கே ஜெபிக்கத் தொடங்கினார், ஒருவேளை, இரவு முழுவதும் ஜெபித்திருக்கலாம். மறுநாள் காலை, சில சங்கிலிகள் சலசலக்கும் சத்தம் கேட்கிறது, படிகளில் ஏறி, இதோ பவுல் வருகிறார், சுவிசேஷத்தைப் பிரசங்கித்ததாலும், பரிசுத்தவான் களுக்கு ஒருவிசை ஒப்புவிக்கப்பட்ட விசுவாசத்திற்காகப் போராடியதாலும் ஏற்பட்ட சங்கிலிகளின் தழும்புகளோடு தன் கைகளை அசைத்துக்கொண்டு அங்கே வந்து நிற்கிறார், தன் கைகளில் அந்தச் சங்கிலிகளோடு. 130 பாருங்கள். அவர் அதைப் பிரசங்கித்து அதற்காகப் போராடினார் என்றால், தேவன் அதற்கான பலனை அவருக்கு அளிப்பார். இதோ அவர் அப்படிப்பட்ட கைகளுடன், "ஒரு நிமிடம் பொறுங்கள். ஒரு நிமிடம் பொறுங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் திடமனதாயிருங்கள்" என்று சொன்னார். அந்தப் பழைய கப்பல் அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. "திடமனதாயிருங்கள். ஏனென் றால், நான் சேவிக்கிற தேவனின் தூதனானவர் நேற்றிரவு என் அருகே நின்றார்." அது அக்கினி ஸ்தம்பமாக இருந்திருக்கலாம், அது என்ன வென்று எனக்குத் தெரியாது. அது பேதுருவிடம் வந்து அவனைச் சிறையிலிருந்து வெளியே கொண்டு வந்த அதே தூதனாக இருந்தி ருக்கலாம். எனக்குத் தெரியாது. 131 ஆனால் அவர் சொன்னார், "நான் சேவிக்கிற தேவனின் தூதனானவர் நேற்றிரவு என் அருகே நின்று, 'பயப்படாதே, பவுலே' என்றார்." வேறுவிதமாகக் கூறினால், "ஐயாக்களே, நேற்றிரவு நான் ஒரு தரிசனத்தைக் கண்டேன். கர்த்தருடைய தூதனானவர் என்னிடம் வந்து, என்னைப் பயப்பட வேண்டாம் என்று சொன்னார். ஏனென்றால் நான் இராயனுக்கு முன்பாகக் கொண்டுவரப்பட வேண்டும், ஆனாலும், இந்தச் சிறிய பழைய கப்பல் ஒரு குறிப்பிட்ட தீவில் சேதமடையப் போகிறது; என்னவென்றால், நான் இராயனுக்கு முன்பாக நிற்க வேண்டும், என்னோடு பயணிக்கிற உங்கள் ஒவ்வொருவரையும் தேவன் எனக்குத் தந்திருக்கிறார். ஆதலால் சகோத ரர்களே," அவர் சொன்னார், "திடமனதா யிருங்கள், ஏனென்றால் நான் தேவனை விசுவாசிக்கிறேன். அது எனக்குக் காண்பிக்கப் பட்டபடியே நடக்கும்." பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புவிக்கப்பட்ட விசுவாசம், அது என்ன? அப்போஸ்தலருக்குள் இருந்த கிறிஸ்துவின் ஆவியானவர். அது சரியா? 132 விரைவாக, முடிக்க வேண்டும். அப்போஸ்தலர்களுக்குள் இருந்த கிறிஸ்துவின் ஆவியானவர், நாம் பெரும்பாலும் அந்தப் புத்தகத்தை, "அப்போஸ்தலருடைய நடபடிகள்" என்று அழைத்திருக்கிறோம். அது தவறு. அது அப்போஸ்தலர்களுக்குள் இருந்த கிறிஸ்துவின் நடபடிகள், ஏனென்றால் அவர்கள் மனிதர்களாக இருந்தார்கள். ஆனால் அவர்கள் அதே விசுவாசத்தைக் கொண்டிருந்தார்கள். 133 இப்போது, அப்போஸ்தலர்களுக்குள் இருந்த கிறிஸ்துவின் ஆவியானவர்தான் அதைச் செய்துகொண்டிருந்தார். முப்பத்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, யூதா சொன்னார், "அந்த விசுவாசத்திற்காகத் தொடர்ந்து போராடுங்கள். நான் எழுதினேன்... உங்களுக்குப் புத்தி சொல்லும்படி உங்களுக்கு எழுதுவதற்கு எல்லா ஜாக்கிரதையையும் காண்பிக்கிறேன்" (வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உங்களைத் தூண்டி விடும்படி) "பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புவிக்கப்பட்ட அதே விசுவா சத்திற்காக நீங்கள் மிகவும் கருத்தாய், கருத்தாய்ப் போராட வேண்டும்" (பற்றிக் கொண்டிருங்கள்). 134 உங்கள் சபை அதை விசுவாசிக்கிறதா? அப்படி விசுவாசித்தால், அது பரிசுத்தவான் களுக்கு ஒருவிசை ஒப்புவிக்கப்பட்ட விசுவாசத் திற்காகப் போராடுகிறது: விசுவாசத்திற்காகக் கருத்தாய்ப் போராடுங்கள். 135 இப்போது, இயேசு கிறிஸ்து பரிசுத்த ஆவியானவரின் ரூபத்தில் இன்று இங்கே இருக்கிறார் என்பதை உங்கள் சபை விசுவாசிக்கிறதா? பரிசுத்த ஆவியானவர் இங்கே இருக்கிறார் என்று நாம் விசுவாசித்தால், வேதாகமம் சொல்லுகிறது, "இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றென்றைக்கும் மாறாதவ ராயிருக்கிறார்." அப்படியானால் அப்போஸ் தலர்கள் மீது இருந்த அதே பரிசுத்த ஆவியானவர்தான் இன்று இங்கே இருக்கிற அதே பரிசுத்த ஆவியானவராக இருக்க வேண்டும். அது சரியா? 136 ஜான் டிலிங்கரின் ஆவி எனக்குள் இருக்கிறது என்று இன்றிரவு நான் உங்களிடம் சொன்னால் என்னவாகும்? ஏன், இங்கே இருப்பது ஆபத்தானதாக இருக்கும். என் பக்கத்தில் இரண்டு பெரிய துப்பாக்கிகளை நான் வைத்திருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பீர்கள், ஏனென்றால் சட்ட விரோதி யான ஜான் டிலிங்கரின் ஆவி எனக்குள் இருந்தது. 137 ஒரு சிறந்த, புகழ்பெற்ற ஓவியரின் ஆவி எனக்குள் இருக்கிறது என்று நான் உங்களிடம் சொன்னால் என்னவாகும்? நான் தூரிகையை வண்ணத்தில் தோய்த்து, உங்களை மெய்சிலிர்க்க வைக்கும்படி, ஒரு சூரிய அஸ்தமனத்தையோ அல்லது அங்கே சீறிவரும் அலைகளையோ ஒரு ஓவியமாக இங்கு தீட்டுவேன் என்று நீங்கள் எதிர்பார்ப்பீர்கள். 138 ஜார்ஜ் பெவர்லி ஷேவின் ஆவி என்று நான் உங்களிடம் சொன்னால் என்னவாகும்? ஐனார் எக்பெர்க்கின் ஆவி எனக்குள் இருக்கிறது என்று உங்களிடம் சொன்னால் என்னவாகும்? அந்த மனிதர்கள் பாடும் இனிமையோடு நான் பாட வேண்டும் என்று நீங்கள் எதிர் பார்ப்பீர்கள், ஏனென்றால் அவர்களுடைய ஆவி எனக்குள் இருக்கிறது. 139 அதோடு கிறிஸ்துவின் ஆவியானவர் எனக்குள் இருக்கிறார் என்று நான் சொன்னால், அது இயேசு கிறிஸ்துவின் ஜீவனைச் சரியாக வெளிப்படுத்த வேண்டும். கிறிஸ்து, அதாவது மகிமையின் நம்பிக்கை, இப்போது நமக்குள்ளே இங்கே இருந்தால், அவர் அன்று வெளிப்படுத்திய அதே ஜீவனையே இப்போதும் சரியாக வெளிப்படுத்துவார். 140 சிகாகோவே, என் பிரியமான நண்பர்களே, நீங்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்தால் விலைக்கு வாங்கப்பட்டவர்கள். என்னை நேசித்து, எனக்குச் செவிகொடுக்க வந்திருக்கும் உங்கள் மேல், நான் அழியாத அன்பு வைத்திருக்கிறேன். நினைவில் கொள்ளுங்கள்: பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புவிக்கப்பட்ட விசுவாசத்திற்காகத் தொடர்ந்து போராடுங்கள்; அது இயேசு கிறிஸ்துவால் நமக்குக் கொண்டுவரப்பட்டு, அப்போஸ்தலர்களிடமிருந்து புனித பிரான்சிஸ் மற்றும் பலருக்கும், அப்படியே தலைமுறை தலைமுறையாகக் கீழாகக் கடத்தப்பட்டது. அவர் நேற்றும், இன்றும், என்றென்றைக்கும் மாறாத அதே கர்த்தராகிய இயேசுவாகவே இருக்கிறார். பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புவிக்கப்பட்ட விசுவாசத்திற்காகப் போராடுவ தற்காகவே நான் இன்றிரவு இங்கே வந்திருக் கிறேன். நான் மரிக்கும் நாள் வரை, பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புவிக்கப் பட்ட விசுவாசத்திற்காக எப்போதும் போராட தேவன் எனக்கு உதவுவாராக. நீங்கள் அதைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே என் ஜெபம், கிறிஸ்துவின் நாமத்தில். 141 பிதாவே, இப்போது பேசப்பட்ட இந்த சில உடைந்த வார்த்தைகள், சுமார் நாற்பத்தைந்து நிமிடங்கள் நீடித்தன, நான் எண்ணியதை விடக் கூடுதலாகத் தாமதமாகி விட்டது, ஏனென்றால் இந்தச் செய்தியும், வார்த்தையும் மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற அழுத்தமும் உணர்வுமே அதற்குக் காரணம். அவர்கள் வார்த்தையை மட்டும் ஏற்றுக்கொண்டால், அவர்கள் உம்மைத் தங்கள் இருதயத்தில் கொண்டிருப்பார்கள். நான் பல மைல்கள் தொலைவில் இருக்கும்போதும், பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புவிக்கப் பட்ட அந்த விசுவாசத்தை அவர்கள் தொடர்ந்து கொண்டிருப்பார்கள். 142 பிதாவே, எனக்குத் தெரிந்த வரை, நான் சத்தியத்தைச் சொல்லியிருக்கிறேன், அது சத்தியம் என்று எனக்கு எப்படிச் சொல்லத் தெரியுமோ அதை முழுமையாகச் சொல்லி யிருக்கிறேன். அதுவே விசுவாசம். இப்போதும் கர்த்தராகிய இயேசுவே, "உலகத்தின் முடிவுபரியந்தமும் நான் உங்களுடனே, உங்களுக்குள்ளும் இருப்பேன்" என்று இந்த வார்த்தைகளை மிக அற்புதமாகச் சொன்னவரே, இன்றிரவு நீர் வந்து, தெய்வீகத்தின் வல்லமையிலும், தரிசனத்தின் வல்லமையிலும், சுகமளிக்கும் வல்லமையிலும், பாவமன்னிப்பின் வல்லமையிலும் உமது உயிர்த்தெழுதலை வெளிப்படுத்த மாட்டீரா? காத்திருக்கும் நாங்க ளான உமது பிள்ளைகள், பசியுள்ள இருதயத்துடன், பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புவிக்கப்பட்ட அந்த விசுவாசத்தின் வெளிப் பாட்டைக் காண விரும்புகிறோம். நீர் எத்தனை முறை வந்தாலும், ஆண்டவரே, நான் அதை இன்னமும் நேசிக்கிறேன். நான் அதை மீண்டும் மீண்டும் காண விரும்புகிறேன்; ஏனென்றால் நான் உம்மை நேசிக்கிறேன். நான் என்றென்றும் உம்மோடு இருக்க விரும்புகிறேன். 143 மேலும், பிதாவே, இன்றிரவு நீர் இந்த ஆராதனையை இப்போது உமது கரங்களில் எடுத்துக்கொண்டு, அன்று நீர் செய்தது போல், எம்மாவுவில் இருந்தவர்களுக்கு அந்த நாளில் அப்பத்தைப் பிட்டு கொடுத்தது போல் வந்து ஏதேனும் செய்ய வேண்டும் என்று ஜெபிக்கிறேன்; நீர் அதை வேறு எவரையும் விட வித்தியாசமாகச் செய்தீர், அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டன, அவர்கள் உம்மை உணர்ந்தார்கள், நீர் அங்கே இருப்பதை உணர்ந்தார்கள், நீர் யார் என்பதை அவர்கள் அடையாளம் கண்டுகொண்டார்கள். இன்றிரவு நீர் வந்து அதையே செய்ய மாட்டீரா? ஒருவேளை, அதே காரியமாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் பரிசுத்தவான்கள் கொண்டிருந்த விசுவாசத்தை உலகத்திற்கு அறிமுகப்படுத்திய அதே இயேசுதான் இன்று வரை அதனைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதை நாங்கள் அறிந்து கொள்ளும் விதத்தில் ஏதேனும் செய்யக் கூடாதா. 144 இன்றிரவு அவிசுவாசியும், சந்தேகிப் பவரும் இரட்சிக்கப்படுவார்களாக. நோயாளிகள் குணமடைவார்களாக, பரிசுத்தவான்கள் களிகூரு வார்களாக. எங்களுக்கு இந்தக் காரியங்களை வாக்களித்த உமது குமாரனாகிய இயேசுவின் நாமத்தில் இதைக் கேட்கிறோம். ஆமென். 145 [ஒலி நாடாவில் காலியிடம்]...? ...இங்கே கீழே உள்ள மக்களுக்கு, அவர்களின் பதிவுகளை மாற்றிக் கொடுப்பதற்கான பொறுப்பை நான் கொடுத்திருக்கிறேன், அவர்கள் இருதயங்களை ஆசீர்வதிப்பீராக, அவர்கள் அவற்றைப் பெற்றுக்கொள்கிறார்கள், ஏனென்றால் தங்களுக்கு என்ன சொல்லப்பட்டது என்பதை ஒரு சில நேரங்களில் தெரிந்து கொள்ளப் பல அன்பானவர்கள் விரும்பு கிறார்கள். கவனியுங்கள். 146 இப்போது, நான் நோயாளிகளுக்காக ஜெபிக்கச் செல்வதற்கு முன், என் அன்பான சகோதர, சகோதரிகளே, இதைச் சொல்கிறேன்: இன்றிரவு, ஒரு காரியம் கூட சொல்லப்படாமல் போகலாம். என்னால் சொல்ல முடியாது. என் கட்டுப்பாட்டில் அது இல்லை. தேவன் அதைக் கட்டுப்படுத்துகிறார். புரிகிறதா? 147 இப்போது, நீங்கள் இதைச் செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இப்போது, விசுவாசிகளாகிய... நீங்கள் சந்தே கிப்பவர்களாக இருந்தால், அது தொடங்கும் போது அருகில் அமராதீர்கள், ஏனென்றால் நீங்கள் உங்களைச் சிக்கலில்தான் தள்ளிக் கொள்வீர்கள். ஆனால் நினைவில் கொள் ளுங்கள், நிச்சயமாக உங்களுக்கு ஒரு நோய் இருக்கலாம், எனவே நினைவில் கொள்ளுங்கள்: பரிசுத்த ஆவியானவர் பிசாசுகளைத் துரத்த வரும்போது, பிசாசின் வல்லமைகள் அதிக அளவில் சுற்றித் திரியும். அதைச் செய்ய அவர் எங்களை நியமித்தார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? 148 அவர் சொன்னார், "இவைகள்..." அவர் பூமியை விட்டுச் செல்வதற்கு முன் அவர் சொன்ன கடைசி வார்த்தைகள், சபைக்குச் சொன்ன கடைசி செய்தி: "நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்." அது சரியா? அது சீஷர்களுக்காக மட்டுமாக இருந்திருக்க முடியாது, ஏனென்றால் அவர் சொன்னார், "உலகமெங்கும், சர்வ சிருஷ்டிக்கும். விசுவா சிக்கிற ஒவ்வொரு சிருஷ்டிக்கும் உலகமெங்கும் இந்த அடையாளங்கள் நடக்கும். என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள், நவமான பாஷைகளைப் பேசுவார்கள், சர்ப்பங்களை எடுப்பார்கள், சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது. வியாதியஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்." பின்னர் அவர் மகிமையில் எடுத்துக்கொள்ளப்பட்டார், அவர் மீண்டும் வானங்களைப் பிளந்துகொண்டு திரும்பிவரும் வரை, அதுதான் பூமியில் கேட்கப்பட்ட அவருடைய குரலின் கடைசி சத்தமாகும். அவர் சொன்னார், "நான் திரும்ப வரும்போது, விசுவாசத்தைக் காண்பேனா? விசுவாசிக்கிறவர்களால் இந்த அடையாளங்கள் நடக்கும்": விசுவாசம். 149 கடிதங்களுடன் வாருங்கள், சகோதரனே. கடித-...[ஒலி நாடாவில் காலியிடம்] இவைக ளுக்காக இப்போது ஜெபிப்போம். 150 சரி. இங்கே வாருங்கள் அம்மா. இப்போது, நான் உங்களிடம் கேட்க விரும்பு கிறேன்; இங்கே ஒரு பெண் நிற்கிறார். சில இரவுகளுக்கு முன்பும் இதே போன்ற ஒரு காரியம் நடந்ததாக நான் நம்புகிறேன், இன்று இரவும் அதுவே நடக்கிறது: இந்தப் பெண் ஒரு-ஒரு கருப்பினப் பெண். அவளுடைய ஆரம்பத்திலிருந்தே, அவளுடைய பின்னணி, அவள் ஒரு எத்தியோப்பியர், நானோ ஓர் ஆங்கிலோ-சாக்சன், அல்லது வெள்ளை யினத்தைச் சேர்ந்தவன். இயேசு சமாரியப் பெண்ணைச் சந்தித்தபோதும் சமாரியாவில் இதே காரியம்தான் நடந்தது, அவள் சொன்னாள், "எங்களுடன் நீங்கள் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்வது வழக்கமல்லவே." ஏனென் றால் அந்த நாட்களில் அவர்களுக்கு இடையே ஒரு-ஒரு இனப் பிரச்சனை இருந்தது, ஆனால் மக்களிடையே எந்தப் பாகுபாடும் இல்லை என்பதை இயேசு அவளுக்குத் தெளிவாகத் தெரியப்படுத்தினார். அது உண்மைதான். 151 "ஏனென்றால், மனுஷர் இந்த மலையிலும் அல்லது எருசலேமிலும் ஆராதனை செய்ய மாட்டார்கள்," அவர் சொன்னார், "ஆனால் மனுஷர் தேவனை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்வார்கள், பிதா வானவர் அப்படிப்பட்டவர்களையே தேடு கிறார்." புரிகிறதா? ஆவியும் உண்மையும். 152 இப்போது, ஆனால் இது ஓர் எடுத்துக்காட்டு: இதோ இந்தப் பெண், நாம் ஒருவருக்கொருவர் முன்பின் அறிமுகமில்லா தவர்கள் என்று நினைக்கிறேன், ஒருவரை யொருவர் அறிய மாட்டோம். ஆனால் தேவன் நம் இருவரையும் அறிவார். மேலும் அவர் இவளை ஓர் எத்தியோப்பியராக அறிவார்; என்னை ஓர் ஆங்கிலோ-சாக்சனாக அறிவார். நாம் இருவருமே ஒரே இரத்தத்தைச் சேர்ந்தவர்கள். தேவன் ஒரே தேசத்தாரை, ஒரே மனிதரை, இரத்தத்தை... ஒவ்வொரு மனிதனும் ஒரே வகையான இரத்தத்தைக் கொண்டி ருக்கிறான்; இரத்தமாற்றம் செய்ய முடியும்... சீனர்கள், ஜப்பானியர்கள், மஞ்சள், பழுப்பு, கருப்பு, வெள்ளை நிறத்தவர்கள், அவர்கள் அனைவருமே ஒரே இரத்தம்தான், அவர்க ளுடைய தோலின் நிறம் மட்டும்தான் வேறு. எனவே இயேசு கிறிஸ்து நம் இருவருக்காகவும் மரித்தார். 153 நாம் இன்றிரவு இங்கே நிற்கிறோம், அவள் ஒரு கிறிஸ்தவள்; அவள் ஒரு கிறிஸ்தவள் என்று எனக்குத் தெரியும், ஏனென்றால்... அது எனக்கு எப்படித் தெரியும்? பிலிப்பு ஒரு-ஒரு விசுவாசி என்பதை இயேசு எப்படி அறிந்திருந்தாரோ அதே வழியில்தான். புரிகிறதா? அவர், "இதோ, கபடமற்ற உத்தம இஸ்ரவேலன்" என்றார். நேர்மையும் உண்மை யுமானவன். நான் அவளை இதற்கு முன் பார்த்ததே இல்லை, அப்படியிருக்க அவள் ஒரு கிறிஸ்தவள் என்று எனக்கு எப்படித் தெரியும்? ஏனென்றால் எனக்குள் அசைவாடுவது ஒரு வரவேற்கத்தக்க ஆவியாக இருக்கிறது. ஊ-ஹூம். பார்த்தீர்களா? அவள் ஒரு கிறிஸ்தவள். அவள் விசுவாசிக்கிறாள். 154 இப்போது, அவள் ஏதோ ஒரு நோக்கத்திற்காக இங்கே வந்திருக்கிறாள். அது தேவனுக்குத் தெரியும், எனக்குத் தெரியாது. ஆனால் அவர் அதை வெளிப்படுத்தினால், கி.பி. 33-ன் கிறிஸ்தவம் 1955-லும் செயல் படுகிறது என்று அர்த்தம். அது சரியா? அப்படியானால் இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றென்றைக்கும் மாறாதவரா யிருக்கிறார், இல்லையா? அப்போஸ்தலர்களிடம் இருந்ததைப்போலவே. 155 தேவன் இப்போது உங்களை ஆசீர்வதிப்பாராக, நாம் ஜெபிக்கும்போதும் நான் இந்தப் பெண்ணிடம் சில நிமிடங்கள் பேசும்போதும். இப்போது, ஜெப வரிசையில், நான் உங்களிடம் பேசும்போது, இப்போது, நீங்கள் போதிய விசுவாசம் இல்லாமல் அங்கே நின்றுகொண்டிருந்தால், நீங்கள் ஒருவேளை சற்று சந்தேகத்தோடு அங்கே இருந்தால், அது எனக்குத் தெரியாது. ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, நீங்கள் அப்படியிருந்து, இது தேவனால் வந்தது என்பதை நீங்கள் உறுதியாக விசுவாசிக்காவிட்டால், வரிசையிலிருந்து வெளி யேறி விடுங்கள்; ஏனென்றால் நீங்கள் இங்கே நின்று கொண்டிருக்கும் போது இருக்கும் நிலையைவிட அதிக ஆபத்தில் சிக்கிக் கொள்வீர்கள். புரிகிறதா? அதை நினைவில் கொள்ளுங்கள். புரிகிறதா? ஏனென்றால் உங்கள் ஜெப அட்டை உங்களை இங்கே கொண்டுவருகிறது, பாருங்கள், அது உங்களுக்கு இங்கே வருவதற்கான உரிமையைத் தருகிறது. ஆனால் அங்கே வெளியே இருப்பது அவருடைய தெரிந்துகொள்ளுதல். ஜெப அட்டைகள் இல்லாமல் அங்கே இருக்கும் மக்கள் என்றால், அவரைத்தான் அவர் தேர்ந்தெடுக்கிறார்; இவர்கள் வெறும் எண்களால் மட்டுமே அழைக்கப்பட்ட மக்கள். எனவே நீங்கள் யார் என்றும், நீங்கள் எதற்காக இங்கே வருகிறீர்கள் என்றும் எனக்குத் தெரியாது. ஆனால் அவர் அங்கே தரிசனங்களைக் காட்டும்போது, அது அவர் எதையாவது தெரிந்து கொள்ள விரும்பும், அல்லது எதையாவது சொல்ல விரும்பும் ஒருவராக இருப்பார், புரிகிறதா. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. 156 இப்போது அம்மா, உங்களோடு சேர்ந்து கர்த்தராகிய இயேசுவின் மீது விசுவாச முள்ளவனாக, அவருடைய மகத்தான அன்பிலும் சர்வ வல்லமையிலும், நான் இப்போது... நீங்கள் சொல்வீர்கள், "சகோதரன் பிரான்ஹாம், நீங்கள் என்ன..." நான் உங்களிடம் பேசிக்கொண்டிருக்கிறேன், எதற்காகவென்றால்... 157 பாருங்கள், இது ஒரு இசைக்கருவியை சுருதி சேர்ப்பது போன்றது, புரிகிறதா? நீங்கள் ஒரு விசுவாசி என்று எனக்குத் தெரியும். எனக்கு அது தெரியும், ஏனென்றால் உங்கள் ஆவி வரவேற்கப்படுவதாக உணர்கிறேன். ஆனால் இப்போது, உங்கள் மனதில் ஏதோ ஒன்று இருக்கிறது, நீங்கள் நடக்க வேண்டும் என்று விரும்பும் ஒன்று, அல்லது தேவனிடம் நீங்கள் கேட்க விரும்பும் ஒரு தயவு, அல்லது ஏதோ ஒன்று இருக்கிறது. இப்போது, அதைச் செய்ய, எனக்குத் தெரியாது. எனவே, இது ஒரு இசைக்கருவியை சுருதி சேர்ப்பது போன்றது. உங்களுக்குப் புரியவில்லை என்றால், நீங்கள் அதைச் சுருதி சேர்க்கிறீர்கள், அது சரியாகச் சுருதி சேரும் வரை அதை இறுக்குகிறீர்கள், தளர்த்துகிறீர்கள். பின்னர் உங்கள் இனிமையான-... உங்களுக்குத் தெரியும், உங்கள் இன்னி சையை எழுப்புவதற்கு, பாருங்கள், அதே வழியில்தான். இதனால்தான் நான் முதலில் மக்களிடம் பேசுகிறேன், மேலும் இங்கே உள்ள இவர்கள், அங்கே வெளியே பால்கனி வழியாகவும், எல்லா இடங்களிலும் அவ்வளவு பேர் ஈர்த்துகொண்டிருக்கிறார்கள், அது தொடர்ந்து, எந்நேரமும் என்னைச் சோர்வடையச் செய்யும் ஒரு செயல்முறையாக இருக்கிறது. இது மக்கள், அவர்களுடைய விசுவாசம். புரிகிறதா? 158 ஆனால், நான் முதலில் வெளியே பார்த்தால், அது எங்கே இருக்கிறது என்று எனக்குத் தெரியாது. அது பார்வையாளர்கள் மத்தியில் முழுவதுமாக இருக்கிறது என்று எனக்குத் தெரியும், ஆனால் அது யார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் தேவனின் தெய்வீகச் சித்தத்தோடும் பரிசுத்த ஆவியா னவரின் வழிநடத்துதலோடும் நான் ஒன்றி ணையும் வரை, இங்கே இரண்டு அல்லது மூன்று பேரைக் கொண்டுவந்தால், அது பார்வையாளர்களிடம் நகரும். நான் சொல்வது புரிகிறதா, கிறிஸ்தவர்களே? ஆம். இப்போது, அதுதான். 159 ஆனால், நிச்சயமாக, உங்களுக்குக் கண் பிரச்சனை இருக்கிறது. நீங்கள் கண்ணாடிகள் அணிந்திருக்கிறீர்கள், உங்கள் கண்ணாடி களுக்காக மட்டுமல்ல, மோசமான கண் பிரச்சனையால் நீங்கள் பாதிக்கப்பட்டுள்ளீர்கள், அது சமீபகாலமாக முன்னெப்போதையும் விட அதிகமாக உங்களைத் தொந்தரவு செய்கிறது. அது சரிதான். உங்கள் கண்கள்தான், உங்கள் கண்களுக்காக ஜெபிக்க வேண்டும் என்று நீங்கள் இங்கே வந்திருக்கிறீர்கள், ஏனென்றால் அவை-அவை முற்றிலும் பார்வை இழந்துவிடுவது போல் தோன்றுகிறது. ஆனால் தேவன் அவற்றைக் காப்பாற்ற வேண்டும் என்று உமக்காக என்னை ஜெபிக்கக் கேட்கவே நீங்கள் வந்திருக்கிறீர்கள். அதுதான் உண்மை என்பதை நான் அறிவேன். 160 அதன்பின், நீங்கள்... உங்கள் கையை ஒரு நிமிடம் என்னிடம் கொடுங்கள். ஆம், உங்களுக்கு ஒரு நோய் இருக்கிறது, சரியாகச் சொன்னால் ஒரு நோய் அல்ல, ஆனால் அது ஒரு வளர்ச்சி. அது ஒரு கட்டி, அந்தக் கட்டி மார்பகத்தில் உள்ளது. அது உங்கள் இடது மார்பகத்தில் உள்ளது. அது சரிதான். உஹூம். இப்போது, பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புவிக்கப்பட்ட விசுவாசம் இதுதான் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? கிணற்றருகே இருந்த பெண்ணிடம், "உனக்கு ஐந்து புருஷர்கள் இருந்தார்கள்" என்று சொன்ன அதே ஆவியானவர்தான் இது என்று விசுவாசிக் கிறீர்களா? உங்களுக்கு உங்கள் நோய் இருப்பதையும் உங்கள் பிரச்சனை என்ன என்பதையும் அவர் அறிந்திருந்தார், அல்லவா? இப்போது, நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? ஒரு நிமிடம் இங்கே வாருங்கள். 161 பரலோகத்திலிருக்கிற அன்பான தேவனே, உமது ஆவியானவர் நம்முடைய சகோதரியின் மீது தங்கியிருக்கவும், உமது ஆவியானவரின் ஆசீர்வாதங்கள் இங்கே இருப்பதால் அவள் சென்று குணமடையவும் ஜெபிக்கிறேன். மேலும் நான்... உமது அடியாளின் மீதான உமது அபிஷேகத்தினால், உமது கட்டளையின்படி நான் அவள் மீது கைகளை வைத்து, அவளை வதைக்கும் பிசாசைப் பார்த்துச் சொல்கிறேன்: அவளை விட்டுப் போ! இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். அம்மா, தேவன் உங்களை ஆசீர்வதிப் பாராக. 162 இப்போது, அம்மா, நீங்கள் வருவீர்களா? நாமே ஒருவருக்கொருவர் அந்நியர்கள் என்று நான் நினைக்கிறேன்? கர்த்தராகிய இயேசுவை நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? இப் போது கடந்து சென்ற அந்தப் பெண்மணி யிடமிருந்து ஒரு பெரிய இழுவிசை வந்தது. அதற்குக் காரணம், அவளுக்குக் கட்டி இருந்தது, உங்களுக்கும் இருக்கிறது. அதுதான் விஷயம். உங்களுக்கு ஒரு கட்டி இருக்கிறது, அவளிடமிருந்து இப்போது வெளியேறிய அந்தப் பிசாசு, இதைப் பார்த்துக் கத்திக் கொண்டி ருந்தது, காண்கிறீர்களா. அது உண்மை. கட்டிக் காகவே நீங்கள் ஜெபிக்கப்பட விரும்புகிறீர்கள். 163 இப்போது, நான் உங்களிடம் ஒரு நிமிடம் பேசினால், தேவன் மற்ற காரியங்களை வெளிப்படுத்துவார். ஆனால் இப்போது நான் ஜெபித்தால், நீங்கள் குணமடைவது நடக்கும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? விசுவா சிக்கிறீர்களா? நான் உங்களுக்குச் சொல்கிறேன்: வேறு ஒருவருக்காகவும் நான் ஜெபிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். ஓ, அது உங்கள் மனதில் சுழன்று கொண்டே இருக்கிறது. நீங்கள் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தீர்கள், நான் உங்கள் மனதை வாசிக்கவில்லை, ஆனால் நான் அந்த வேண்டுதலைக் கடந்து சென்று விடுவேனோ என்று நீங்கள் ஆச்சரியப்பட்டுக் கொண்டி ருந்தீர்கள். அது சரியல்லவா? நான் உங்கள் மனதை வாசிக்கவில்லை. அது உண்மை. அது உங்கள் மகள். அது சரியல்லவா? அவள் ஒரு மனநலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளாள். இன்றிரவு உங்களோடு அவள் இந்தக் கட்டிடத்தில் இல்லை. ஆனால் அவள் குணமடைய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள், இல்லையா? 164 இப்போது, உங்கள் உடல் முழுவதும் ஏதோவொன்றை நீங்கள் உணருகிறீர்கள், இல்லையா? அது சரி என்றால், உங்கள் கையை மட்டும் அசைக்கவும். அது கர்த்தருடைய தூதன். சகோதரி, இப்போது அதை விசுவாசிக்கிறீர்களா? இப்போது உங்கள் விசுவாசம் மேலே எழும்பட்டும், அது முடிவடையட்டும். 165 பிதாவே, உமது குமாரனாகிய கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில், நான் அவள் மீது என் கைகளை வைத்து, இதுவே குணமாக இருக்க வேண்டும் என்று, இயேசுவின் நாமத்தில், அவருடைய மகிமைக்காகக் கேட்கிறேன். ஆமென். சகோதரி, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்போது, இது இங்குள்ள எவரையும் நம்பச் செய்ய வேண்டும்: இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார். அது உண்மையா? நிச்சயமாக அது உண்மை. சரி. அவரை இங்கே கொண்டு வாருங்கள். 166 ஓ, கர்த்தராகிய இயேசுவை நம்புவது எவ்வளவு அழகானது. இப்போது, பாருங்கள், உண்மையிலேயே, இப்போது பரிசுத்த ஆவியானவர் என்னை என்ன செய்யச் சொல்வாரோ, இப்போதே (காண்கிறீர்களா?), இப்போதே, பரிசுத்த ஆவியானவரின் பரிபூரண தெய்வீக வழிநடத்துதல்களை நான் பின்பற்றினால், அது இப்போதே ஒரு ஒப்படைப்பாக இருக்கும். காண்கிறீர்களா? ஆனால் இது கடைசி இரவாக இருப்பதால், தேவன் இன்னும் கொஞ்சம் நேரம் கிருபையைப் பகிர்ந்தளிப்பாராக, அநேகர் வரிசையில் நிற்கிறார்கள். தேவன் அதை அருளுவாராக. 167 ஆனால் இப்போதே, ஏதோவொன்று "ஹூ, ஹூ" என்று செல்வதைப் போல, பார்வையாளர்களை நோக்கிக் கூப்பிடுவதை, கூப்பிடுவதை, கூப்பிடுவதை நான் உணர்கிறேன். ஓ, அங்கிருந்த வேலைக்காரனைப் போல, இன்றிரவு தேவன் உங்கள் கண்களைத் திறக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். நான் ஒரு மாயக்காரன் அல்ல. நான் உங்கள் சகோதரன். ஜெபித்து விசுவாசியுங்கள். அங்கிருக்கும் மக்களே, தேவனிடம் விசுவாசம் வையுங்கள். 168 ஐயா, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள். கர்த்தராகிய இயேசுவைப் பற்றி நான் பிரசங்கிக்க முயற்சிக்கும் நற்செய்தி சத்தியம் என்பதை உங்கள் முழு இருதயத்தோடும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா, ஐயா? விசுவாசிக்கிறீர்களா? [சகோதரன் சொல்கிறார், "எனக்குத் தெரியும்."] அது அப்படித்தான் என்று உங்களுக்குத் தெரியும். அப்படித்தான் சொல்ல வேண்டும். காண்கிறீர்களா? ஏனெனில் உங்கள் வார்த்தையினால் நீங்கள் கண்டிக்கப்படுவீர்கள், அல்லது உங்கள் வார்த்தையினால் நீங்கள்-நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள். நீங்கள் கர்த்தராகிய இயேசுவை விசுவாசிக்கும்போது, அவருக்கு முன்பாக மனிதர்களுக்கு சாட்சி பகருங்கள், அவர் உங்களைப் பிதாவுக்கும் பரிசுத்த தூதர்களுக்கும் முன்பாக அறிக்கை செய்வார். 169 நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்கள். எனக்கு உங்களைத் தெரியாது. உங்களுக்கு என்னைத் தெரியாது. நாம் வாழ்க்கையில் சந்தித்ததே இல்லை. ஆனால் நீங்கள் பிறந்ததிலிருந்து தேவனுக்கு உங்களைத் தெரியும், நான் பிறந்ததிலிருந்து அவருக்கு என்னைத் தெரியும். மேலும் நமது நித்திய இலக்கு அவருடைய கரங்களில் உள்ளது. அப்படியானால், நீங்கள் எதற்காக இங்கே வந்திருக்கிறீர்கள் என்பதையோ, அல்லது ஏதேனுமொன்றையோ, அவர் சொல்ல விரும்பும் எதையுமே, எனக்குப் பற்றி எதுவும் தெரியாது என்று உங்களுக்குத் தெரிந்த ஒன்றையோ அவர் வந்து எனக்குத் தெரியப்படுத்தினால், அது உங்களை முழு இருதயத்தோடும் விசுவாசிக்கச் செய்யுமா? 170 உங்கள் பிரச்சனை உங்கள் நெஞ்சில் உள்ளது. அது சரி. அது அங்கு இருப்பதற்கான காரணம் இதுதான்; நீங்கள் புகைபிடிப்பவர். நீங்கள் சிகரெட் புகைக்கிறீர்கள், அதுதான் உங்கள் நெஞ்சு அப்படி இருப்பதற்குச் சரியான காரணம். அதுமட்டுமல்ல, நீங்கள் அவற்றை விட்டு விட முயற்சிப்பதையும் நான் காண்கி றேன். நீங்கள் அதை ஒழிக்க முயற்சிக்கிறீர்கள், ஆனால் உங்களால் முடியாத அளவுக்கு அந்த விஷயம் உங்களைப் பிடித்துக் கொண்டி ருப்பதாகத் தெரிகிறது. ஆனால் இப்போது அது நீங்கிவிடும் என்ற உங்கள் நம்பிக்கைகள் கட்டப்பட்டுள்ளன. நீங்கள் ஏமாற்றப்பட மாட்டீர்கள். நீங்கள் கேட்பதை நீங்கள் பெறுவீர்கள். இப்போது, உங்கள் வழியில் செல்லுங்கள். சிகரெட்டுடனான உங்கள் பழக்கம் முடிந்துவிட்டது. தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இந்தப் பிசாசு இந்த மனிதனை விட்டு விலகட்டும். சந்தோஷமாகச் செல்லுங்கள். 171 இவர்தானா...? ...அம்மா, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள். நாமும் ஒருவருக் கொருவர் அந்நியர்கள் என்று நினைக்கிறேன், இல்லையா? நாம் ஒருவருக்கொருவர் அறிய மாட்டோம். இயேசு நம் இருவரையும் அறிவார், இல்லையா? 172 [சகோதரர் பிரான்ஹாம் இடை நிறுத்துகிறார்] நான்... அது ஆர்கனின் இசை, இயேசு வருகிறார். அது சரிதான். "சோதிக் கிறவனின் வல்லமை உடைக்கப் பட்டது," நிச்சயமாக, அது சரிதான். அவனுடைய வல்லமை உடைக்கப்பட்டது. 173 அம்மா, இந்த வழியே பாருங்கள். நீங்கள் ஒரு குறைபாட்டிற்காக இங்கே வந்திருக்கிறீர்கள்; அது ஒரு வளர்ச்சி (கட்டி). அது உங்கள் கையில் இருக்கிறது என்று நான் நம்புகிறேன். அது சரியா? ஒரு வீக்கம், அது உங்கள் வலது கையில் உள்ளது, கையின் அக்குளில் கைக்கு நேர் கீழே; அது ஒரு வளர்ச்சி, ஒரு வீக்க நிலை, அது சரியல்லவா? அது உண்மை. இயேசு இப்போது உங்களைக் குணமாக்குகிறார் என்று விசுவாசிக்கிறீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. செல்லுங்கள், இங்கே. தேவனுடைய குமாரனாகிய இயேசுவின் நாமத்தில், நம்முடைய சகோதரியிடமிருந்து அந்தப் பொல்லாததை நாங்கள் துரத்துகிறோம். ஆமென். அது மிகவும் எளிமையானதாகத் தோன்று கிறது, அது அப்படித்தான். ஆனால் தேவனுடைய வல்லமை அதைச் செய்கிறது. 174 அம்மா, நீங்கள் வருவீர்களா? நாம் ஒருவருக்கொருவர்-மற்றும்-மற்றும் மற்றவ ருக்கு அந்நியர்கள் என்று வைத்துக் கொள் வோம்; நாம் ஒருவருக்கொருவர் அறிய மாட்டோம். இயேசு நம் இருவரையும் அறிவார், இல்லையா? அவர் நம் இருவரையும் அறிவார். நிச்சயமாக, உங்களைப் பார்க்கும்போது நீங்கள் ஒரு கிறிஸ்தவரைப் போலவே இருக்கிறீர்கள், அம்மா. மேலும் நீங்கள் ஒரு கிறிஸ்தவர் என்பதை அறிந்துகொள்ள உங்கள் ஆவி வரவேற்கப்படுகிறது. உங்கள் வாழ்க்கையிலும் எளிதான மலர்ப்படுக்கை இருந்ததில்லை. ஆவியானவரில் அது நகர்வதைப் போலவே, ஒரு இருண்ட கோட்டை, ஒரு தடையத்தை நான் காண்கிறேன். நான் உங்களுக்காக ஜெபிக்க வேண்டும் என்பதற்காக நீங்கள் இங்கே இருக்கிறீர்கள், ஏனென்றால் உங்களுக்கும் ஒரு வளர்ச்சி (கட்டி) உள்ளது, அந்த வளர்ச்சி பாதத்தில் உள்ளது, அது இடது பாதத்தில் உள்ளது. அது சரியல்லவா? அது சத்தியம். நான் ஜெபிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பும் ஒரு அன்பானவர் அல்லது ஒரு நண்பர் உங்களுக்கு இருக்கிறார். நான் அதைச் சொல்வேன் என்று நீங்கள் நினைக்கவில்லை, இல்லையா? ஆனால் நான்-நான்... அவரைப் பற்றித்தான் நீங்கள் சிந்தித்துக் கொண்டி ருந்தீர்கள். அந்த நபருக்குப் பக்கவாதம் வந்துள்ளது; அதற்கு இரண்டு முறை பக்கவாதம், இரண்டு முறை பக்கவாதம் வந்துள்ளது. அந்த நபரைப் பற்றிய மற்றொரு விஷயம், அது ஒரு கிறிஸ்தவர் அல்ல. அது உண்மையல்லவா? இப்போது, நீங்கள் குணமடைந்து விட்டீர்கள், கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில், அந்த கைக்குட்டையை உங்கள் நபரின், உங்கள் நண்பரின் மீது கொண்டு போய் வையுங்கள். 175 உங்கள் முழு இருதயத்தோடும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? பயபக்தியுடன் இருங்கள். ஒரு நிமிடம் இருங்கள், அம்மா, அது சரி. முன்னேறிச் செல்லுங்கள். அப்படியே முன்னேறிச் செல்லுங்கள். மூலையில் ஒரு தரிசனம் நகர்ந்து கொண்டிருக்கிறது. குன்றுகளையும் அசையும் மரங்களையும் போல சிலவற்றை நான் காண்கிறேன், அது ஒரு... அந்த இடத்தை நான் அடையாளம் காண்கிறேன் என்று நம்புகிறேன். அது-அது, நான் நம்புகிறேன், பைன்வில், கென்டக்கி. அங்கே ஒரு பெண்மணி இருக்கிறார், பைன்வில், கென்டக்கியில் உள்ள உங்கள் சகோதரிக்காக நீங்கள் வந்திருக்கிறீர்கள், யார்... உங்களிடம் இல்லை... அம்மா, உங்களிடம் ஜெப அட்டை இருக்கிறதா? உங்களிடம் ஜெப அட்டை இல்லையா? உங்களிடம் ஜெப அட்டை இல்லையா? சரி, அப்படியென்றால் அது சரிதான். கென்டக்கியிலுள்ள பைன்வில்லில் உங்கள் சகோதரி காசநோயால் (TB) பாதிக்கப்பட்டுள்ளார். அது உண்மையல்லவா? சரி, தேவன் உங்கள் வேண்டுதலை உங்களுக்கு அருளினார். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்கள் விசுவாசம் அதைச் செய்துள்ளது. 176 நண்பர்களே, பாருங்கள், உங்களிடம் ஜெப அட்டை இருக்க வேண்டியதில்லை. உங்களிடம் விசுவாசம் இருக்க வேண்டும்; அதுதான் தேவனுடைய வரத்தைச் செயல் படுத்துகிறது, ஜெப அட்டை அல்ல, உங்கள் விசுவாசம். அதுதான் தேவனுடைய பெரிய பிரம்மாண்டமான வரங்களைச் செயல் படுத்துகிறது. அவரிடம் விசுவாசம் வையுங்கள்; அவரைச் சந்தேகிக்க வேண்டாம்; உங்கள் முழு இருதயத்தோடும் அவரை விசுவாசியுங்கள். 177 தேவனுக்கே துதி உண்டாவதாக. நீங்களும் ஒருவருக்காக நிற்கிறீர்கள். அவர்கள் இங்கிருந்து தொலைவில் இருக்கிறார்கள். அது திரும்புவதை நான் காண்கிறேன்; அது தெற்கே வெகு தொலைவில் உள்ளது; அது அட்லாண்டா, ஜார்ஜியா. அது சரியா? அது ஒரு அன்பானவர். அது ஒரு-ஒரு இளைஞன், இளைஞர்கள், அது ஒரு-ஒரு போலியோ வழக்கு. அவர்கள் என்னை அழைப்பதையோ அல்லது அந்த நபருக்காக வந்து ஜெபிக்கும்படி எனக்கு ஒரு செய்தியை அனுப்புவதையோ நான் காண்கிறேன். அது சரியல்லவா? அந்தக் கைக்குட்டையை அவர்களிடம் கொண்டு செல்லுங்கள், அது அதே காரியத்தைச் செய்யும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அப்படியே ஆகக்கடவது. ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. விசுவாசம் வையுங்கள். 178 தேவன் உங்களைக் குணமாக்குகிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அந்த நாற்காலியில் அமர்ந்திருக்கும்போதே அவர் உங்களைக் குணமாக்கிவிட்டார் என்று நான் உங்களிடம் சொன்னால் நீங்கள் என்ன சொல்வீர்கள்? செல்வி. ஷேன், அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் விசுவாசிக் கிறீர்களா? உங்கள் பெயர் எனக்கு எப்படித் தெரியும் என்று நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்கள், இல்லையா? நீங்கள் இங்கே இல்லினாய்ஸில் உள்ள வாகேகன், இல்லினாய்ஸில், 428 சவுத் யூட்டிகா தெருவில் வசிக்கிறீர்கள். வீட்டிற்குச் செல்லுங்கள்; நீங்கள் உங்கள் வேண்டுதலைப் பெற்றுவிட்டீர்கள். ஆமென். 179 பெரிய அல்பாவும் ஒமேகாவும், ஆதியும் அந்தமும், இருந்தவரும், இருக்கிற வரும், வருகிறவருமானவரும், தாவீதின் வேரும் சந்ததியும், விடிவெள்ளி நட்சத்திரமும், வழியும், வாசலும், தேவன் ஏற்படுத்திய ஆட்டுக் குட்டியானவரும், யெகோவா-யீரே, மனாசே, யெகோவாவுமாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமம் போற்றப்படுவதாக. ஓ, சகல மீட்பும், சகல ஆசீர்வாதங்களும், சகல வல்லமையும், சகல பலமும் அவருக்குள்ளேயே இருக்கிறது, மேலும் இன்றிரவு இங்குள்ள ஒவ்வொரு விசுவாசியின் கைகளுக்கும் எட்டக்கூடிய தூரத்தில் இருக்கிறது. ஆமென். 180 அம்மா, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள். நான் அவருடைய ஊழியக்காரன் என்பதை உங்கள் முழு இருதயத்தோடும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் தமனிகள் (arteries) தொடர்பான தமனிகளின் ஒரு ஒரு நோயினால் அவதிப்படுகிறீர்கள்: அதாவது தமனிகள் தடிமனாகும் (hardening of the artery) நோய். இயேசு உங்களைக் குணமாக் குவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? மிச்சிகனில் இருக்கும் கீல்வாதத்தால் (arthritis) பாதிக்கப்பட்டுள்ள உங்கள் கணவரிடம் செல்வதற்காக, என்னிடம் கொடுப்பதற்கு நீங்கள் உங்கள் கையில் ஒரு கைக்குட்டையை வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அது சரியல்லவா? கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் அதை அவரிடம் கொண்டு செல்லுங்கள் மற்றும்... நாம் "கர்த்தருக்கு ஸ்தோத்திரம்" என்று சொல்வோம். [சபையார், "கர்த்தருக்கு ஸ்தோத்திரம்" என்று சொல்கிறார்கள்] உங்களால் விசுவாசிக்க முடிந்தால்... 181 அந்தப் பெண்கள் சம்மந்தமான பிரச்சினையிலிருந்து தேவன் உங்களைக் குணமாக்குகிறார் என்று நீங்கள் விசுவாசிக் கிறீர்களா? நல்லது, அப்படியே மேடையை விட்டு கீழே செல்லுங்கள், "கர்த்தருக்கு நன்றி" என்று மட்டும் சொல்லுங்கள். "கர்த்தருடைய நாமம் போற்றப்படுவதாக" என்று நாம் சொல்வோம். தேவனிடம் விசுவாசம் வையுங்கள். 182 அங்கே சின்ன தொப்பி அணிந்து கொண்டு அமர்ந்திருக்கும் அந்தப் பெண்மணி, நெஞ்சு வலியால் அவதிப்பட்டு என்னைப் பார்த்துக் கொண்டிருக்கும் கறுப்பினப் பெண்மணி, அங்கேயே அமர்ந்திருக்கும் உங்களுக்கு இயேசு குணமளிக்கிறார் என்று விசுவாசிக்கிறீர்களா, அம்மா? நீங்கள் அதை விசுவாசித்தால், நல்லது, நீங்கள் அதைப் பெற்றுக்கொள்ளலாம். இருங்கள்... ஆம், அப்போது உங்கள் தலையைத் திருப்பி அங்கே மறுபக்கம் பார்த்த நீங்கள்தான். அது அங்கே இருக்கிறது. நீங்கள் உங்கள் நெஞ்சைப் பிடித்துக் கொண்டிருந்தீர்கள்; ஏதோ தவறாக இருந்தது. இயேசு கிறிஸ்து உங்களைக் குணமாக்கிவிட்டார் என்று நீங்கள் விசுவாசித்தால், நீங்கள் கேட்பதை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சரி, சென்று அதைப் பெற்றுக் கொள்ளுங்கள். 183 அதே நேரத்தில் மற்றொரு கறுப்பினப் பெண்மணி தோன்றுவதை நான் கண்டேன். ஒரு நிமிடம். ஆனால் அது சற்று வித்தியாசமாக இருந்தது. கர்த்தராகிய இயேசு... ஜெப அட்டை இல்லாமல் அங்கே நீங்கள் யாராக இருந்தாலும், இப்போது இந்த வழியே பார்க்கத் தொடங் குங்கள், விசுவாசியுங்கள். ஒரு கறுப்பினப் பெண்மணி ஏதோ செய்வதை நான் கண்டேன், ஆனால் அது கொடுக்கப்பட்டதை விட வித்தியா சமான ஒரு பரிசோதனையாக இருந்தது... இதோ அவள் இருக்கிறாள். அது ஒரு குடல் இறக்கம், பெருங்குடல் பாதிப்பு. அங்கேயே அமர்ந்தி ருக்கிறார், அது சரியல்லவா? அது சரி என்றால் உங்கள் கையை அசையுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் இப்போது சென்று நலமாக இருங்கள். 184 விசுவாசிப்பதற்கு உங்களுக்கு இன்னும் என்ன வேண்டும்? அம்மா, நீங்கள் பதட்டமாக இருக்கிறீர்கள், இல்லையா? கலக்கமடைந் துள்ளீர்கள், ஏனென்றால் உங்களுக்குப் பெண்கள் சம்மந்தமான பிரச்சினை, ஒரு பெண்ணின் பிரச்சினை உள்ளது. பெண்ணின் மீது, கர்ப்பப்பையில் இது ஒரு சிறிய புண். இப்போது, அப்படியே உங்கள் வழியில் செல்லுங்கள்; நீங்கள் குணமடைந்துவிட்டீர்கள். இயேசு கிறிஸ்து உங்களைக் குணமாக்குகிறார். செல்லுங்கள். தேவனிடம் விசுவாசம் வையுங்கள். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்கள் முழு இருதயத் தோடும்? ஓ, அற்புதம்! 185 நான் என் சுயநினைவில் இல்லை என்று நினைக்க வேண்டாம். நான் அப்படி இல்லை. இப்போது, பயபக்தியுடன் இருங்கள். யாரோ ஒருவரை நான் காண்கிறேன், இங்கே அமர்ந்திருக்கும் இந்த மனிதர் என்று நான் நம்புகிறேன். அவர் ஜெபித்துக் கொண்டி ருக்கிறார்... அவருக்கு-அவருக்கு-அவருக்கு ஒரு பையன் இருக்கிறான், அவனுக்காக அவர் ஜெபித்துக் கொண்டிருக்கிறார், அவனுக்குக் கண்ணில் கண்புரை (cataract) அறுவை சிகிச்சை செய்யப் பட்டுள்ளது. சகோதரா, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, உங்கள் வழியில் செல்லுங்கள். நீங்களும் குணமடைந்து விட்டீர்கள். எனவே கர்த்தராகிய இயேசு உங்களோடு இருப்பாராக. ஆமென். விசுவாசம் வையுங்கள். சந்தேகிக்க வேண்டாம். தேவன் சொன்னது சத்தியம் என்று விசுவாசியுங்கள், நீங்கள் செய்ய வேண்டிய தெல்லாம் அவ்வளவுதான். 186 அங்கேயே அமர்ந்திருக்கும் உங்களுக்கு, குடலிறக்கத்திலிருந்து (rupture) தேவன் உங்களைக் குணமாக்குவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? ஹும்? அவர் செய்வார் என்று விசுவாசிக்கிறீர்களா? சரி, அங்கே இருக்கும் முதியவரே, உங்கள் வழியில் சென்று சந்தோஷப்படுங்கள். உங்கள் முழு இருதயத் தோடும் விசுவாசியுங்கள். செல்லுங்கள், சந்தோஷப்படுங்கள். 187 இங்கே கீழே அமர்ந்திருக்கும் ஒருவருக்கு இரட்டை குடலிறக்கம் (double rupture) உள்ளது. அந்த இரட்டை குடலிறக்கத்திலிருந்து தேவன் உங்களைக் குணமாக்கப் போகிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? ஹும்? நீங்கள் அதை விசுவாசித்தால், விசுவாசத்தைக் கொள்ள முடிந்தால், உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால், நீங்கள் அதைப் பெற்றுக் கொள்ளலாம். 188 சகோதரி, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள். உங்களுக்கு பல காரியங்கள் தவறாக உள்ளன. நான் ஜெபிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பும் உங்கள் பெரிய காரியங்களில் ஒன்று, உங்களைத் தொந்தரவு செய்யும் அந்த விறைப்புத்தன்மை, அந்த கீல்வாதத்திற்காக (arthritis). அது சரியல்லவா? இப்போது அதைப் பெற்றுக் கொண்டீர்கள் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்கள் விசுவாசம் போதுமானது என்று நினைக்கிறீர்களா? நான் உங்கள் மீது என் கைகளை வைக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள், நிச்சயமாக; நீங்கள் கடந்து செல்லும்போது நான் அதைச் செய்யப் போகிறேன், எனவே வாருங்கள். 189 பிதாவே, உமது ஆவியானவர் என் சகோதரியின் மீது வரட்டும். அவளுடைய எலும்புகளை ஒன்றாக இணையச் செய்யும் இந்த விறைப்பான ஆவியை, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் கண்டிக்கிறேன், அவள் சென்று குணமடைவாளாக. ஆமென். அம்மா, தேவன் உங்களை ஆசீர்வதிப் பாராக. விசுவாசம் வையுங்கள். உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். 190 பலவீனமும் நரம்பு சம்பந்தப்பட்ட இருதயமும் உங்களைத் தொந்தரவு செய்கிறது; இயேசு கிறிஸ்து உங்களைக் குணமாக்கப் போகிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவர் உங்களைக் குணமாக்கிவிட்டார். உங்களைச் சுற்றியே திரும்புகிறது, கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் நீங்கள் குணமடைந்து விட்டதால், உங்கள் வழியில் சென்று மகிழ்ச்சியாக இருங்கள். 191 வாருங்கள், அம்மா. உங்கள் முழு இருதயத்தோடும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்கள் இரவு உணவைச் சாப்பிடச் செல்லவும், உங்கள் உணவை மீண்டும் ரசிக்கவும், அந்தப் பழைய வயிற்றுப் பிரச்சனை உங்களை விட்டு நீங்கவும் விரும்புகிறீர்களா? நல்லது, சென்று உங்கள் இரவு உணவைச் சாப்பிடுங்கள், கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் சந்தோஷப் படுங்கள். விசுவாசம் வையுங்கள். 192 இளம்பெண்ணே, உங்களுக்கு இருக்கும் பெண்கள் சம்மந்தமான பிரச்சினையைக் கொண்டிருக்க நீங்கள் மிகவும் இளையவர். ஆனால் இயேசு கிறிஸ்து அதிலிருந்து உங்களைக் குணமாக்கப் போகிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? மைக்ரோஃபோன் களிலிருந்து விலகி உங்களிடம் ஒரு நிமிடம் பேச விரும்புகிறேன், நான் பேசலாமா? ஒரு நிமிடம். [சகோதரர் பிரான்ஹாம் மைக்ரோஃ போன்களிலிருந்து விலகி, அந்தப் பெண் மணியிடம் பேசுகிறார். ஒலி நாடாவில் காலியிடம்] நீங்கள் பொதுமக்களுக்கு முன்பாகச் சொல்ல முடியாத ஏதோவொன்று. தேவன் மட்டுமே இது நடப்பதைக் கண்டார் என்பதை அந்த இளம்பெண் அறிவாள். சற்று முன்பு இங்கே வந்து அப்போது குணமடைந்த இளம்பெண்ணே, அது சரியா? உங்கள் கையை உயர்த்துங்கள். தேவன் மட்டுமே... ஆம். அங்கே நான் உங்களிடம் சொன்னது, அது சரியா? தேவன் ஒருவரால் மட்டுமே... அதை அறிந்திருக்க முடியும். காண்கிறீர்களா? ஓ, நீங்கள் அதை விசுவாசித்தால், உங்களுக்கு விசுவாசம் இருந்தால் அவர் இங்கே இருக்கிறார். 193 வாருங்கள், அம்மா. ஆஹா, அந்தப் பழைய நீரிழிவு நோயிலிருந்து மீண்டு மீண்டும் நலமடைவது நன்றாக இருக்கும், இல்லையா? நீங்கள் நலமடையப் போகிறீர்கள் என்று விசுவாசிக்கிறீர்களா? தேவனுடைய குமார னாகிய இயேசுவின் நாமத்தில், உங்கள் சுகத்திற்காக நான் கேட்கிறேன். இப்போது இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சென்று குணமடையுங்கள். 194 என் சகோதரா, தேவனுடைய தீர்க்கதரிசியாக எனக்கு நீங்கள் கீழ்ப்படி வீர்களா? நீங்கள் கீழ்ப்படிந்தால், கீல்வாதத் திலிருந்து மீள்வதற்கான உங்களின் ஒரே நம்பிக்கை அதுதான். ஒரு இளைஞனைப் போல மேடையை விட்டு வெளியே நடந்து செல்லுங்கள், "இதுமுதல், இதைக் கொண்டிருக்க நான் மறுக்கிறேன். அவருடைய மகத்துவமாகிய இயேசு கிறிஸ்துவின் சமூகத்தில் நான் நின்று கொண்டிருக்கிறேன்" என்று சொல்லுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்கள் மேடை-யில் செல்லுங்கள்... இப்போது அங்கிருந்து நடந்து செல்லுங்கள். அதோ போகிறீர்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சகோதரி, அவரைப் பின்தொடர்ந்து செல்லுங்கள், விசுவாசித்துக் குணமடையுங்கள். இயேசு கிறிஸ்து உங்களை முழுமையாக்குகிறார். 195 கர்த்தருக்கு ஸ்தோத்திரம். சரி, வாருங்கள். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இப்போது, ஒரு நிமிடம், அந்தப் பெண் மணியிடம் ஏதோவொன்று இருட்டாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது, மிகவும் இருட்டாக, அவளைச் சுற்றி வட்டமிடுகிறது. ஓ தேவனே, இரக்கமாயிரும். ஓ, இது ஒரு புற்றுநோய், ஆம், சரி. அதிலிருந்து தேவன் உங்களை இப்போது குணமாக்க முடியும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவரே குணமாக்குகிறவர், இல்லையா? உங்கள் முழு இருதயத்தோடும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? கர்த்தருடைய தூதன் என்னைச் சந்தித்தபோது, புற்றுநோய் குணமாக்கப்படும் என்று அவர் நியமித்தார். இங்கே வாருங்கள். 196 சர்வவல்லமையுள்ள தேவனே, இந்த ஏழைப் பெண்ணுக்கு, அவளுடைய உடலில் இந்த நிலை இருப்பதை அறிந்து, ஆண்டவரே, என் விசுவாசம் அவளுடைய விசுவாசத்தோடு இணைய வேண்டும் என்று இப்போது நான் கேட்கிறேன். மேலும் அன்று இரவு என்னைச் சந்தித்து, நியமித்து, "நீ உண்மையாக இருந்து, மக்களை விசுவாசிக்கச் செய்தால், புற்று நோய்கூட நிலைநிற்காது" என்று சொன்ன தேவனுடைய பெரிய தூதனே. பிதாவே, நீங்கள் அவளைக் குணமாக்குவீர்கள் என்று என் முழு இருதயத்தோடும் நான் விசுவாசிக்கிறேன். மேலும் நான் பிசாசைப் பார்த்துச் சொல்கிறேன்: இயேசுவின் நாமத்தில், அவளை விட்டு வெளியே வா. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்போது உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசித்துக் கொண்டு செல்லுங்கள். 197 அங்கே அமர்ந்திருக்கும் அம்மா, அந்த உயர் இரத்த அழுத்தத்திலிருந்து (high blood pressure) நீங்கள் விடுபட விரும்புகிறீர்களா? அங்கே அமர்ந்திருக்கும் நீங்கள், இப்போது சுமார் பத்து நிமிடங்களாகக் குணமடைந்து ள்ளீர்கள். ஆமென். நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதை இப்போது செய்வீர்களா? உங்கள் மகள் மருத்துவமனையில் இருக்கிறாள்; அவளுக்குப் பக்கத்தில் அமர்ந்திருக்கிறீர்கள், அது சரிதான். அவர் மீது உங்கள் கையை வையுங்கள், வைப்பீர்களா? பிதாவே, இயேசுவின் நாமத்தின் மூலமாக அவளுக்கு விடுதலையை அருளும்படி, நான் ஜெபிக்கிறேன். ஆமென். கவலைப்படாதீர்கள், சகோதரா, இருதயப் பிரச்சினையைக் கண்டு பயப்பட வேண்டாம். உங்கள் வழியில் சந்தோஷமாகச் செல்லுங்கள். இயேசு கிறிஸ்து குணமாக்குவார். 198 தேவனிடம் விசுவாசம் வையுங்கள். உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். இப்போது நகர வேண்டாம். நீங்கள்-நீங்கள் அங்கும் இங்கும் நகர்ந்தால், ஆராதனையை நாங்கள் இங்கேயே முடிக்க வேண்டியிருக்கும். காண்கிறீர்களா? ஏனென்றால் அது என்னைக் கலக்கமடையச் செய்கிறது. காண்கிறீர்களா? 199 அங்கேயே அமர்ந்திருக்கும் உங்களுக்கு விலாவில் (side) பிரச்சனை உள்ளது, அங்கே, கடைசி முனையிலிருந்து இரண்டாவதாக அமர்ந்திருக்கும் நபர். இல்லையா, அம்மா? அதிலிருந்து நீங்கள் அப்போது குணமடைந்து விட்டீர்கள். எழுந்து நின்று, உங்கள் சுகத்திற்காக "கர்த்தருக்கு ஸ்தோத்திரம்" என்று மட்டும்-மட்டும் சொல்லுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. மண்ணீரல் (spleen) பிரச்சனை. வாருங்கள். விசுவாசம் வையுங்கள். சந்தேகிக்க வேண்டாம். விசுவாசியுங்கள். நீங்கள் விசுவாசித்தால், நீங்கள் கேட்பதை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். 200 ஐயா, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? நாமும் ஒருவருக்கொருவர் அந்நியர்கள் என்று நான் நினைக்கிறேன், சகோதரா. நீங்கள் ஒரு கிறிஸ்தவரா, விசுவாசியா? நீங்கள் அப்படித் தான் என்று நான் காண்கிறேன். என்னிடம் கேட்க உங்களுக்கு ஒரு வேண்டுதல் உள்ளது, ஐயா; அது ஒரு அன்பானவருக்காக, அது உங்கள் தந்தைக்காக. அவருக்குப் பக்கவாதம் வந்துள்ளது. அவருக்கு இரண்டு முறை பக்க வாதம் வந்துள்ளது. உங்களுக்கு, உங்களுக்கே, நீரிழிவு நோய் உள்ளது. மேலும் நீங்கள் விரும்பு-... நீங்கள் ஒரு மருத்துவர். அது சரி. உங்கள் பயிற்சியில் நீங்கள் நோயாளிகளுக்காக ஜெபிக்கிறீர்கள். ஓ தேவனே, இயேசுவின் நாமத்தில், எங்கள் சகோதரருக்கு அவருடைய வேண்டுதலை அருளும். ஆமென். சகோதரா, தேவன் உங்களை ஆசீர்வதிப் பாராக. விசுவாசம் வையுங்கள். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? தேனே, உன் கண்களுக்காக விசுவாசிக் கிறாயா? இயேசு உன்னைக் குணமாக்கப் போகிறார் என்று விசுவாசிக்கிறாயா? நிச்சயமாக அவர் குணமாக்குவார். 201 நண்பர்களே, என்னால் இதற்கு மேல் வெகுதூரம் செல்ல முடியும் என்று நான் நம்பவில்லை, நான் ஏறக்குறைய... இது வெறுமனே, அவர் வெறுமனே... அது இப்போது அப்படியே தளர்ந்து போகிறது போலத் தோன்றுகிறது. இப்போது நீங்கள் விசுவாசிப்பீர்களா? நீங்கள் ஒவ்வொருவரும் இப்போது விசுவாசத்தோடு இருங்கள். உங்கள் கைகளை ஒருவர் மீது ஒருவர் வையுங்கள். நான் ஒரு ஒப்படைப்பு ஜெபத்தைச் செய்ய அனுமதியுங்கள். 202 சகோதரர் வுட் அல்லது யாராவது சீக்கிரம் இங்கே வாருங்கள். பார்க்கிறீர்களா? ஒருவர் மீது ஒருவர் உங்கள் கைகளை வையுங்கள். (எனக்குக் கொஞ்சம் தண்ணீர் அல்லது ஏதாவது கொண்டு வாருங்கள்.) எங்கும் ஒருவர் மீது ஒருவர் உங்கள் கைகளை வையுங்கள். 203 இரக்கமுள்ள தேவனே, என் பலம் குறைந்து போவதால், ஓ தேவனே, இரக்க மாயிரும் பிதாவே. என் முழு இருதயத்தோடு செய்யும் விசுவாச ஜெபத்தினால், இங்குள்ள ஒவ்வொரு வியாதியுள்ள, நோயுற்ற நபரின் சரீரத்தையும் நான் கண்டிக்கிறேன். மேலும் பரிசுத்த ஆவியானவராகிய நீர், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் வல்லமையை அவர்களுக்கு வெளிப்படுத்தி, அவர்களைக் குணமாக்க வேண்டும் என்று நான் கேட்கிறேன். 204 சாத்தானே, நீ தோற்கடிக்கப் பட்டு விட்டாய். நீ இனிமேலும் மக்களைப் பிடித்து வைத்திருக்கவில்லை. நீ அம்பலப் படுத்தப் பட்டு விட்டாய். விசுவாசிக்கின்ற, இங்குள்ள ஒவ்வொரு நபரை விட்டும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே வெளியே வா. விசுவாசத்திற்காகத் தைரியமாய்ப் போராடுங்கள் 123